ரஜினியின் 173வது படத்தை கமல் தயாரிக்க டான் பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். ப்பில் உருவாகிறது. இதன் அறிவிப்பு கடந்த ஜனவரியில் வெளியாகியிருந்தது. குடும்ப பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது. 

Advertisment

இப்படம் குறித்து ‘வித் லவ்’ பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய சிபி சக்ரவர்த்தி, ரஜினி ரசிகர்களுக்கும் குடும்ப ரசிகர்களுக்கும் இப்படம் திருப்தி கொடுக்கும் என உறுதியளித்திருந்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். பின்பு இப்படத்தின் நடிகர்கள் குறித்த தகவல் வெளியானது. அதாவது நடிகை பிரியங்கா மோகன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 

Advertisment

இந்த நிலையில் பட அப்டேட் ஒன்றை பகிர்ந்துள்ளார் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி. அதாவது படத்த்ன் ஸ்க்ரிப்ட் பணிகள் நிறைவடைந்தது போலவும் முழு திரைக்கதையுடன் அடுத்தக் கட்டத்துக்கு தயாராவது போலவும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் ‘ஆரம்பிக்கலாமா’ என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். இதனால் இப்படம் விரைவில் படப்பிடிப்புக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.