இயக்குநர் ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாகவும் பிரித்விராஜ் வில்லனாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தை துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோ பிஸ்னஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார். 

Advertisment

இப்படம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. சமீபத்தில் படத்தின் பிரித்விராஜ் லுக் வெளியானது, கும்பா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தொடர்ந்து பிரியங்கா சோப்ரா லுக் வெளியானது. இவர் மந்தாகினி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இந்த நிலையில் படக்குழு சார்பில் க்ளோம் ட்ரோட்டர் என்ற தலைப்பில் ஹைதரபாத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படத்தின் தலைப்பு, மோஷன் போஸ்டர் வீடியோ மூலம் வெளியிடப்பட்டது. ‘வாரணாசி’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். 

Advertisment

நிகழ்வில் ராஜமவுலி​யின் தந்​தை​யும், திரைக்​கதை ஆசிரியரு​மான விஜயேந்​திர பிர​சாத், “இந்​தப் படம் ஒரு தெய்​வீக முடிவு, ராஜமவுலி​யின் இதயத்​தில் இருந்து ஹனு​மன் இப்​படத்தை இயக்​கு​வதற்கு வழி நடத்​துகிறார்" என்றார். பின்பு நிகழ்ச்சியில் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாக சிறிது நேரம் தடைபட்டு போனது. இதனால் கோபமான ராஜமௌலி மேடையில் பேசுகையில், “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. என் அப்பா அனுமன் நமக்குப் பின்னால் இருந்து பார்த்துக் கொள்வார் என சொன்னார். இப்படித்தான் பார்த்துக் கொள்வாரா. இதை நினைத்தால் எனக்கு கோபம் வருகிறது. என் மனைவிக்கும் அனுமன் மேல் நிறைய அன்பு உண்டு.  அவர் அனுமனை தனது நண்பனை போல நினைத்து பேசுவார். இதனால் மனைவி மீதும் எனக்கு கோபம் உண்டு” என்றார்.