டப்பிங் யூனியன் தலைவராக நடிகர் ராதாரவி இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டப்பிங் ஆர்டிஸ்ட் சங்கிதா என்பவர் டப்பிங் யூனியனில் உறுப்பினராக இருக்கும் ஷாஜி என்பவர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் செய்வதாக யூனியனில் புகார் கொடுத்திருந்தார். பின்பு அந்த புகாரை யூனியன் மேலிட பொறுப்பாளர்கள் பெற்றுக்கொள்ளவில்லை என நீதிமன்றம் சென்றார். அதில் நான்கு வருடங்களுக்கு பிறகு தற்போது ஷாஜிக்கு 6 மாதம் தண்டை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் ராதா ரவி மீதும் சங்கீதா குற்றம் சாட்டினார். அதாவது, டப்பிங் யூனியன் மீட்டிங் நடந்த போது ராதா ரவி தன்னை ஒருமையில் பேசியதாகவும் அவரின் உத்தரவின் பேரில் சிலர் என்னை தாக்கியதாகவும் கூறினார். இதையடுத்து அவர் டப்பின் யூனியனில் இருந்து நீக்கப்பட்டார். 

Advertisment

அவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ராதா ரவி உட்பட சில டப்பிங் யூனியன் உறுப்பினர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்பு அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அது சம்பந்தமாகவும் சங்கீதா நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்றத்தில் வழக்கு குறித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் உத்தரவுப்படி காவல் துறையினர் செயல்படவில்லை என சங்கீதா சமீபத்தில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் யூனியன் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்த தற்போது அது தொடர்பாக ராதா ரவி தலைமையில் யூனியன் நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்தித்துப் பேசினர். 

Advertisment

460

அப்போது ராதா ரவி பேசுகையில், “யூனியனின் உறுப்பினர் இல்லாத ஒரு நபர் குற்றச்சாட்டை வைக்கிற போது அதை விளக்க வேண்டும் என நினைத்தேன். எங்க யூனியனில் யாருமே இது போன்ற தப்புகளை பண்ண மாட்டார்கள். அவர் பொய் சொல்கிறார். பொய் எப்போதுமே வெற்றி பெறாது. உண்மை எப்போதும் அமைதியாக இருக்கும். ஆனால் வெற்றி பெற்று விடும். இப்படி பிரச்சனைகள் வருவதால் மீண்டும் நான் தலைவராக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். எனக்கு என் யூனியன் தான் முக்கியம். என்னைப் பற்றி என்ன பேசினாலும் பரவாயில்லை” என்றார். 

இதையடுத்து செயலாளர் பேசுகையில், “அந்த பெண் முதல் முறை ஷாஜியால் பாதிக்கப்பட்டதாக சொல்லும் போது ஏன் யூனியனில் புகார் சொல்லவில்லை. மூன்று வருடம் கழித்து ஏன் சொல்கிறார். அவரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு சாதாரணமாக முடித்து வைக்கப்படவில்லை. விசாரணை நடந்து அந்த பெண் சொல்கிற மாதிரி எதுவுமே நடக்கவில்லை எனத் தெரிந்த பின்பு தான் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எந்த ஆதாரத்தையும் எங்களிடம் அந்த பெண் கொடுக்கவில்லை. ஷாஜியை இடைக்காலத் தடை செய்திருக்கிறோம். அவர் கைதாகும் பட்சத்தில் நிரந்தரமாக யூனியனில் இருந்து நீக்கப்படுவார்” என்றார். 

Advertisment