சசிகுமார் - சிம்ரன் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவின். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. மேலும் வசூலிலும் 90 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படம் தொடர்பாக ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன், நானி உள்ளிட்டோர் அபிஷன் ஜீவிந்தை நேரில் அழைத்து பாராட்டியிருந்தனர். இப்படத்தைத் தொடர்ந்து அபிஷன் ஜீவந்த் நாயகனாக உருவெடுத்தார். இப்போது அதன் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் அபிஷன் ஜீவந்துக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. முன்னதாக டூரிஸ்ட் ஃபேமிலி பட ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் அபிஷன் ஜீவந்த் யாரும் எதிர்பாராத விதமாக தனது காதலியை அறிமுகப்படுத்தினார். அதாவது மேடையில் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென மேடைக்கு கீழ் அமர்ந்திருந்த அவரது காதலி அகிலாவை பார்த்து, ‘வரும் அக்டோபர் 31ஆம் தேதி கல்யாணம் பண்ணிக்கிறியா’ எனக் கேட்டார். அவர் கேட்டதும் கீழிருந்த அவரது காதலி எமோஷனலாக கண்கலங்கினார். இந்த சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/28/15-5-2025-10-28-18-28-37.jpg)
இந்த நிலையில் அபிஷன் ஜீவந்த் சொன்னது போல் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி அவருக்கு காதலி அகிலாவுடன் திருமணம் நடக்கவுள்ளது. இந்த திருமணத்திற்கு தற்போது டூரிஸ்ட் ஃபேமிலி பட தயாரிப்பாளர் மகேஷ் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ எஸ்யுவி காரை திருமண பரிசாக அபிஷன் ஜீவனத்திற்கு வழங்கி வாழ்த்தியுள்ளார். இதையடுத்து தற்போது அபிஷன் ஜீவந்துக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/28/13-3-2025-10-28-18-28-06.jpg)