‘நித்தம் ஒரு வானம்’ பட இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கத்தில் பிரியங்கா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘மேட் இன் கொரியா’. ரைஸ் ஈஸ்ட் என்​டர்​டெ​யின்​மென்ட் தயாரித்துள்ள இப்படம் நேரடியாக நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 12ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் அப்படத்தின் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த அவர், சோசியல் மீடியாவில் தனக்கு எதிராக நடக்கும் விஷயங்கள் குறித்து பேசியிருந்தார். அதாவது சமீப காலமாக அவரது நடிப்பு பலராலும் ட்ரோல் செய்யப்பட்டது. மீம்களாகவும் உலா வந்தது. மேலும் அவரது புகைப்படம் ஏஐ-யால் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு வைரலானது. இந்த விஷயங்கள் தொடர்பாக அவரிடம், தொகுப்பாளர் உங்கள் மீது குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், “இதற்கு ஆம் என்று தான் நான் கூறுவேன். பிரச்சாரம் என்பது பெரிய வார்த்தை. ஆனால் அது போல் நிறைய விஷயங்கள் நடந்திருக்கிறது. கடந்த காலத்தை பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால், அது ஒரு நிச்சயமற்ற தொழில் என்பதை புரிந்துக் கொண்டேன்.
யாரோ ஒருவருக்கோ எதாவது நடக்கலாம். ஆனால் அது என்னையும் காயப்படுத்துகிறது, அதே சமயம் அந்த வீழ்ச்சி தான் எனக்கு எழுச்சி பெற உதவுகிறது. என்னை வைத்து வரும் மீம்கள் பணம் கொடுத்து உருவாக்கப்படுகிறது. என்னை பிடிக்காத ஒருவர் எனக்கு எதிராக இதனை செய்து வருகிறார். அது யார் என எனக்கு தெரியவில்லை. அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. ஏனென்றால் இவை அனைத்தும் என்னை வலிமையாக்குகிறது” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/09/361-2026-03-09-15-58-04.jpg)