‘நித்தம் ஒரு வானம்’ பட இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கத்தில் பிரியங்கா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘மேட் இன் கொரியா’. ரைஸ் ஈஸ்ட் என்​டர்​டெ​யின்​மென்ட் தயாரித்துள்ள இப்படம் நேரடியாக நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 12ஆம் தேதி வெளியாகிறது. இதன் டீசர் கடந்த மாதம் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் சிறுவயதில் இருந்தே கொரியாவுக்கு போக வேண்டும் என பெரிய கனவோடு இருக்கும் பிரியங்கா மோகன், அதற்காக அந்நாட்டு மொழியை கற்கிறார். பின்பு பணம் சேர்த்து பல போராட்டங்களுக்கு அங்கு போகிறார். அங்கு அவருக்கு கிடைக்கும் அனுபவத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.
சென்பா என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். ஒரு பெண்ணின் பயணத்தை காமெடி எமோஷன் கலந்து சொல்லியிருப்பது போல் ட்ரெய்லர் அமைந்துள்ளது. படமும் முழு நீள எமோஷ்னல் ட்ராமாவாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது. ட்ரெயலர் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படம் தமிழதைத் தாண்டி தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/04/138-2026-03-04-18-59-49.jpg)