Advertisment

‘வாரணாசி’; ராஜமௌலியிடம் கோரிக்கை வைத்த பிரியங்கா சோப்ரா!

11 (41)

ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படம் ‘வாரணாசி’. இதில் நாயகியாக பிரியங்கா சோப்ராவும் வில்லனாக பிரித்விராஜும் நடிக்கின்றனர். இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோயிங் பிஸ்னஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றனர். படத்தின் அறிமுக நிகழ்ச்சி கடந்த ஆண்டு நவம்பரில் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. அதில் வெளியிடப்பட்ட முன்னோட்டமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி இப்படம் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டது. 

Advertisment

இந்த நிலையில் இப்படம் தொடர்பாக மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்டோர் ஒரு பேட்டி கொடுத்துள்ளனர். அதில் பிரியங்கா சோப்ரா படத்தில் ஒப்பந்தமானது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “நான் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக எந்த இந்தியப் படத்திலும் நடிக்கவில்லை. அதனால் ராஜமௌலி என்னை அழைத்த போது, என்னை இப்படத்தில் நடனமாட வைப்பீர்களா என்றொரு கோரிக்கையை வைத்தேன். மேலும் நான் நடனமாடி ரொம்ப காலம் ஆனதால் இதை வைத்தேன்” என்றார். 

Advertisment

பின்பு மகேஷ் பாபு பேசும்போது, “நாங்கள் ஏற்கனவே ஒரு பாடலை படமாக்கிவிட்டோம். அந்த பாடல் எங்கள் மனதில் திரும்பத் திரும்ப ஒடிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக பிரியங்கா, அந்த பாடலை எல்லா நேரமும் பாடிக்கொண்டே இருப்பார். இந்த பாடல் அவர் நடனமாட விரும்பியதால் உருவானது” என்றார்.  

mahesh babu ss rajamouli Priyanka chopra Varanasi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe