தமிழில் விஜய் நடித்த தமிழன் படம் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் பிரியங்கா சோப்ரா. பின்பு பாலிவுட்டுக்கு சென்று பாஜிராவ் மஸ்தானி, டான் 2, க்ரிஷ் 3 உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். பின்பு அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு ஹாலிவுட்டில் செட்டிலானார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் ‘வாரணாசி’ படம் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வர அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் அவரது சினிமா கரியரில் முக்கியமாக நடந்த பாலிவுட் டூ ஹாலிவுட் அரங்கேறியது குறித்து மனம் திறந்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “பாலிவுட்டில் இருந்து நான் வெளியேறுவேன் என நினைத்ததில்லை. ஆனால் பாலிவுட்டில் நான் நடித்தபோது பல காரணங்களுக்காக ஒதுக்கப்பட்டதாக உணர்ந்தேன். அதனால் எனது கரியரை மேம்படுத்த விரும்பினேன். ஒரு நடிகையாக எனக்கு உற்சாகம் தரும் வாய்ப்புகளை தேடினேன். அமெரிக்காவில் வேலைக்கு சேர்ந்தேன்.
இப்போது கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு அற்புதமான படைப்புகளை தேர்வு செய்து நடிப்பதற்கான உந்துதலை காண்கிறேன். ஆனால் அது எளிதான காரியம் அல்ல. எனக்கு என்னுடைய இந்திய படங்கள் மிகவும் பிடிக்கும். மீண்டும் வாரணாசி மூலம் இந்திய சினிமாவிற்கு திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சி. இரண்டு துறையில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்பதை நான் வெறுக்கிறேன். அப்படி எனக்கு ஒரு போதும் தோன்றியது இல்லை. இரண்டு உலகங்களிலும் பயணிப்பது போல் உணர்கிறேன். மேலும் இரண்டு துறையிலும் வேலை செய்வதை ரசிக்கிறேன்.
கலாச்சாரங்கள் போலவே பல வழிகளில் இரண்டு துறையும் வேறுபட்டவைதான். ஆனால் அதற்கு ஏற்றார் போல் வெவ்வேறு வழிகளில் என்னால் வேலை செய்ய முடியும். இது தனித்துவமான அற்புதமான விஷயம்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/23/16-64-2026-02-23-16-36-38.jpg)