தெலுங்கு மற்றும் கன்னட சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் ஒரு பிரபல நடிகை தனியார் நிறுவன ஊழியரால் ஆன்லைனில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆணான சம்பவம் அரக்கேறியுள்ளது. முதலில் அந்த நடிகைக்கு பேஸ்புக்கில் நவீன்ஸ் என்ற பெயரில் ஒரு ஃப்ரெண்ட் ரெக்கொஸ்ட் வந்துள்ளது. ஆனால் அதை அவர் அக்சப்ட் செய்யவில்லை. இருப்பினும் அந்த அக்கவுண்டில் இருந்து கொச்சையான வார்த்தைகளில் மெசேஞ்சர் மூலம் தினமும் மெசேஜ் வந்துள்ளது. 

Advertisment

அதனால் அந்த அக்கவுண்ட்டை நடிகை ப்ளாக் செய்துள்ளார். இருப்பினும் அந்த நபர் பல்வேறு ஃபேக் ஐடிகளை உருவாக்கி தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்யும் வகையில் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதாவது அவரது அந்தரங்க உறுப்பை வீடியோ எடுத்து அனுப்பி உள்ளார். மேலும் ஆபாச மெசேஜ்களையும் அனுப்பியுள்ளார். இது தொடர்ந்து மூன்று மாதமாக நடந்து கொண்டிருக்க கடந்த 1ஆம் தேதி அந்த நபர் மீண்டும் மெசேஜ் செய்துள்ளார். 

Advertisment

இதனால் அவரை எச்சரிக்க முடிவெடுத்து அந்த நடிகை அவரை ஒரு ரெஸ்டாரண்டுக்கு நேரில் வரும்படி அழைத்துள்ளார். அதன்படி அந்த நபர் ரெஸ்டாரண்டுக்கு வர அவரை கடுமையாக நடிகை எச்சரித்துள்ளார். ஆனால் அந்த நபர் ரொம்ப மோசமாக நடந்து கொண்டுள்ளார். இதனால் கோபமடைந்த நடிகை பெங்களூரு அன்னபூரணேஸ்வரி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறை அந்த நபரை கைது கைது செய்துள்ளது. விசாரணையில் அவர் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் டெலிவரி மேலாளராக வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. அவர் தற்போது நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.