Advertisment

அறுவைசிகிச்சையால் காத்திருந்த படக்குழு - எமோஷ்னலான நடிகை!

1

ஓ பட்டர்ஃப்ளை திரைப்படம், ஆன்ட்ஹில் சினிமா நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். பாலம்பூர் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்திற்கு, துல்சியா நிறுவனம் கன்சல்டிங் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளது. ஒரு வலுவான மற்றும் திறமையான கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. 

Advertisment

அறிமுக இயக்குநர் விஜய் ரங்கநாதன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி மற்றும் கீதா கைலாசம் உள்ளிட்ட திறமையான நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளது. உறவுகளின் மென்மையையும், கணிக்க முடியாத தன்மையையும் ஒரு த்ரில்லர் பாணியில் பேசும் இப்படம் வரும் மார்ச் 6ம் தேதி திரையரங்குளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

Advertisment

நிகழ்வில் நடிகை நிவேதிதா சதீஷ் பேசும்போது, இந்த மேடையில் இருப்பது மிகவும் எமோஷனலாக உள்ளது. கேப்டன் மில்லர் படத்திற்காக மிகவும் கடின உழைப்பை கொடுத்தேன், கிட்டத்தட்ட 1 வருடம் அந்த படத்தில் பணியாற்றி நிறைய கற்றுக்கொண்டேன். ஆனால் நான் எதிர்பார்த்த பலன் எனக்கு கிடைக்கவில்லை என்று தோன்றியது. சினிமா நமக்கு சரிப்பட்டு வருமா அல்லது வேறு ஒரு துறையில் கவனம் செலுத்தலாமா என்று தோன்றியது. சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கலாம் என்று நினைத்தேன். அந்த சமயத்தில் தான் ஓ பட்டர்ஃப்ளை படம் எனக்கு வந்தது. நான் இதுவரைக்கும் கேட்ட நரேஷன்களில் அது சிறப்பாக இருந்தது. இந்த படம் பண்ணலாம் என்று முடிவு எடுத்த பிறகு நிறைய ரிகர்சல் செய்தோம். படம் ஆரம்பிக்கும் போது எனக்கு ஒரு அறுவை சிகிச்சை இருந்தது.

படக்குழு நினைத்து இருந்தால் வேறு நடிகையை கமிட் செய்திருக்கலாம், ஆனால் எனக்காக காத்திருந்தனர். என்னுடைய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனருக்கு நன்றி. இந்த படம் ஒரு புதிய ஜானரில் உருவாகியுள்ளது. இந்த படம் ஹியூமன் எமோஷனல் பற்றி பேசுகிறது. இந்த படத்தை பார்த்து வெளியே வரும் போது நல்ல ஒரு மனதுடன் வெளியே வருவீர்கள் என்று நம்புகிறேன். இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இயக்குனர் விஜய் போன்ற நபர்கள் கிடைப்பது அரிது. இந்தப் படம் ஒரு நல்ல ஒரு எக்ஸ்பீரியன்ஸை கொடுத்தது. இந்த படத்திற்கு அனைவரும் சப்போர்ட் செய்வீர்கள் என்று நம்புகிறேன். இசையமைப்பாளர் நல்ல ஒரு ஓர்க்கை இந்த படத்திற்கு கொடுத்துள்ளார். இந்த படம் சிங் சவுண்ட் முறையில் உருவாகியுள்ளது. அனைவருக்கும் நன்றி.

PRESS MEET tamil cinema
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe