இயக்குநர் ரத்னகுமார் ‘29’ எனும் தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். இதில் நாயகனாக விது மற்றும் நாயகியாக ப்ரீத்தி அஸ்ராணி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனஸ் பாத்திமா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். 

Advertisment

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடந்த விழாவில் ப்ரீத்தி அஸ்ராணி கலந்து கொண்டு பேசுகையில், “நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் எனக்கு சிறப்பானது தான். அதிலும் இந்த '29 ' என் மனதிற்கு நெருக்கமான திரைப்படம். அத்துடன் என்னுடைய கனவு நனவான தருணம் இது. நான் தமிழில் முதல் படத்தில் நடிக்கும் போதே ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் நிறுவனத்தில் பணியாற்றினால் குடும்பத்தில் இருப்பது போன்ற உணர்வு கிடைக்கும் என்பார்கள். அதனால் அந்த நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இன்று நிறைவேறி இருக்கிறது. அவர்களது குடும்பத்தில் நானும் ஒருத்தியாக இணைந்து இருக்கிறேன். இந்த கதை மீது  கார்த்திக் சுப்புராஜ் மற்றும் கார்த்திகேயன் சார் ஆகியோர் வைத்த நம்பிக்கைதான் எங்களுக்கெல்லாம் பணியாற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்கியது. 

Advertisment

இயக்குநர் என்னை சந்தித்து கதையை சொன்னவுடன் மகிழ்ச்சியுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை அளித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளை எப்படி நாங்கள் உணர்ந்து நடித்திருக்கிறோமோ.. அது பார்வையாளர்களாகிய நீங்களும் உணர்வீர்கள் என நம்புகிறோம். இந்தப் படத்திற்கான ப்ரோமோ வீடியோவில்.. நீங்கள் யார்?  என்ற கேள்வியை உங்களுக்குள் நீங்களாக ஆழமாக கேட்டு கொள்ளும் வகையில் இருக்கிறது. இது ரசிகர்களுக்கும் பொருந்தும் என எதிர்பார்க்கிறோம். படத்தைப் பற்றி வரும் நிகழ்வில் அதிகமாக பகிர்ந்து கொள்கிறேன்” என்றார்.