Advertisment

பிரபல நடிகை தற்கொலை வழக்கு - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

20 (60)

1998 முதல் தமிழ் மற்றும் தெலுங்கில் மொத்தம் 11 படங்களில் மட்டுமே நடித்தவர் நடிகை பிரதியுஷா. தமிழில் முரளி நடித்த மனுநீதி, பிரபு நடித்த சூப்பர் குடும்பம், ராமராஜன் நடித்த பொன்னான நேரம், விஜயகாந்த் நடித்த தவசி, முரளி நடித்த கடல் பூக்கள், சத்யராஜ் நடித்த சவுண்ட் பார்ட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமாக இருந்தார்.  

Advertisment

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் சித்தார்த்தா ரெட்டி என்பவரை காதலித்து வந்தார். ஆனால் இருவரும் 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி குளிர்பானத்தில் விஷம் கலந்து தற்கொலைக்கு முயற்சித்தனர். பின்பு இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிரதியுஷா சிகிச்சை பலனின்றி உயிரழந்தார். சித்தார்த்தா ரெட்டி உயர் பிழைத்தார். 22 வயதான பிரதியுஷா திடீரென தற்கொலைக்கு முயன்றிருப்பது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது.

Advertisment

பிரதியுஷாவின் தாயார், சித்தார்த்தா ரெட்டி தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக நடந்த வழக்கில் 2004 ஆம் ஆண்டு சித்தார்த்தா ரெட்டிக்கு நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சித்தார்த்தா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அதே போல் பிரதியுஷா தாயாரும் தன் மகளுக்கு நீதி வேண்டி உச்ச நீதிமன்றத்தை அணுகினார். 

இந்த இரு வழக்கில் தற்போது 14 ஆண்டுகளுக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சித்தார்த்தா ரெட்டி மனு தள்ளுபடி செய்யப்பட்டு நான்கு வாரங்களுக்குள் அவர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என தெரிவித்துள்ளது. 

Supreme Court Actress
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe