கர்நாடக மாநில தினம்  இன்று(01.11.2025) கொண்டாடப்படுகிறது. 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மைசூர் மாநிலம், 1973 ஆம் ஆண்டு கர்நாடகா என பெயர் மாற்றப்பட்டது. அன்று முதல் இப்போது வரை நவம்பர் 1ஆம் தேதி கன்னட மாநிலம் தினம் அல்லது கன்னட ராஜ்யோத்சவா தினம் என்ற பெயரில் அம்மாநில மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

Advertisment

இந்த விழாவில் கலை, இலக்கியம், சமூக சேவை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கர்நாடகா வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை ஆற்றிய நபர்களுக்கு ராஜ்யோத்சவா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கர்நாடக ராஜ்யோத்சவா விருதுகள் 70 பிரபலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பஜந்தி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சித்தையா உள்ளிட்ட பலரும் அடங்கிய நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜும் இடம்பெற்றுள்ளார். இந்த விருதை பெறுபவர்களுக்கு 5 லட்சம் ரொக்கமும் 25 கிராம் தங்கப் பதக்கமும் கொடுக்கப்படும். இந்த விருதுகள் அம்மாநிலத்தின் இரண்டாவது உயரிய விருதாக கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 

Advertisment

இந்த விழாவில் திரைத்துறையில் சிறப்பு கௌரவிப்பாக வழங்கப்படும் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்நாள் சாதனையாளருக்கான டாக்டர் ராஜ்குமார் விருது மூத்த நடிகரான உமாஸ்ரீ க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புட்டண்ணா கனகல் விருது இயக்குநர் என்.ஆர். நஞ்சுண்டேகவுடாவுக்கும் டாக்டர் விஷ்ணுவர்தன் விருது நடிகர் ரிச்சர்ட் காஸ்டெலினோக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெறுபவர்களுக்கு ஐந்து லட்சம் பணமும் 50 கிராம் தங்கப்பதக்கமும் கொடுக்கப்படும். இவ்விருது நவம்பர் 3ஆம் தேதி மைசூரில் நடக்கவிருக்கும் மாநில திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்படுகிறது.