லவ் டுடே, டிராகன், டியூட் என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை கொடுத்து பிரபல நடிகராக வலம் வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அதுவும், நடித்த மூன்று படங்களுமே ரூ.100 கோடி கிளப்பில் இணைந்து சாதனை படைத்தது. இப்படங்களை தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் அடுத்த மாதம் 18ஆம் தேதி திரைக்கு வருகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/18/18-16-2025-11-18-13-24-55.jpg)
இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் அவரது இணை இயக்குநர் ரமேஷ் என்பவருக்கு பரிசு வாங்கி கொடுத்துள்ளார். முதல் படத்தில் இருந்து தொடர்ந்து பணியாற்றி வருவதால் அவருடைய உழைப்பையும் விஸ்வாசத்தையும் பாராட்டிம் கார் ஒன்றை பரிசாக வழங்கி மகிழ்ந்துள்ளார். இணை இயக்குநர் ரமேஷ் அவருடைய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us