பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மமிதா பைஜு நாயகியாக நடித்திருக்க சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவரது இசையில் படத்தின் முதல் பாடலாக வெளியான ‘ஊரும் ப்ளட்’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இரண்டாவது பாடலாக வெளியான ‘நல்லாரு போ’ பாடல் போதிய வரவேற்பு பெறவில்லை. இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகிறது. 

Advertisment

இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரெய்லரில், ‘லைஃப்ல ஒரு விஷயத்தை நீ லெஃப் ஹாண்ட்ல டீல் பண்ணா, லைஃப் உன்ன லெஃப்ட் ஹாண்ட்ல டீல் பன்னும்’ என பிரதீப் ரங்கநாதன் வசனம் ஆரம்பத்தில் இடம்பிடித்திருக்க பின்பு அவரது வாழ்க்கை கலர்ஃபுல்லாக இருக்கும் காட்சிகளுடன் விரிகிறது. அடுத்து அவரும் மமிதா பைஜுவும் தங்களது வீட்டில் காதல் விஷயத்தை சொல்ல திடீரென மமிதா பைஜூ காதல் இல்லை என பிரதீப் ரங்கநாதனிட சொல்கிறார். பின்பு சோக காட்சிகள் வர அதில் ‘அடுத்தவன் ஃபீலிங்ஸ இப்ப கிரிஞ்சா பார்க்குறதுதானே இப்ப ட்ரெண்டு’ என வசனம் பேசுகிறார். 

Advertisment

பின்பு இருவரும் ஒன்று சேர முயற்சிக்கின்றனர். ஆனால் பிர்தீப் ரங்கநாதனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஏற்பாடு நடக்க அதில் கையில் தாலியுடன் இருக்கும் பிரதீப் ரங்கநாதன் குழப்பத்தில் இருக்கும் காட்சிகள் வருகிறது. பின்பு அவரிடம் தாலிக்கு எந்த மரியாதையும் இல்லையா என சரத்குமார் கேட்க, அதற்கு ‘தாலிக்கு எந்த மரியாதையும் இல்ல, அதுக்கு பின்னாடி இருக்குற அந்த பொன்னோட ஃபீலிங்ஸுக்குத்தான் மரியாதை’ என அதிரடியாக பதிலளிக்கிறார். இறுதியில் பிரதீப் ரங்கநாதன் மமிதா பைஜூ சேர்ந்தார்களா இல்லையா என்பதை காமெடி கலாட்டா மற்றும் காதல் கலந்து படத்தில் சொல்லியிருப்பது போல் ட்ரெய்லர் அமைந்துள்ளது.