பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் தீபவளியை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி வெளியான படம் ‘டியூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். 

Advertisment

இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று நேற்று வரை ரூ.95 கோடி வசூலித்திருந்தது. படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுனர். அப்போது இயக்குநர் பேசுகையில், இப்படம் இன்று ரூ.100 கோடி அடித்து விடும் எனக் கூரியிருந்தார். அதுப் போலவே தற்போது படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளது, 

Advertisment

இப்படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்ததன் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார் நடிகர் பிரதீப் ரங்கநாதன். இவர் ஹீரோவாக நடித்த முதல் படமான ‘லவ் டுடே’ படம் முதல் முறை ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது. அடுத்து நடித்த டிராகன் படமும் இரண்டாவதாக இணைந்தது. இப்போது அவரது மூன்றாவது படமான டியூட் படமும் மூன்றாவது படமாக ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இதன் மூலம் தான் நடித்த மூன்று படங்களுமே தொடர்ச்சியாக ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த ஒரு புதிய சாதனையை பிரதீப் ரங்கநாதன் படைத்துள்ளார். 

Advertisment