Advertisment

“வேடிக்கை பார்க்குறதுக்கு தான் இந்த வாழ்க்கையே” - மாணவர்கள் முன் பிரதீப் ரங்கநாதன் பேச்சு

09 (35)

இன்றைய இளைஞர்களின் விருப்ப நாயகனாக இருக்கும் பிரதீப் ரங்கநாதன் கடைசியாக ‘டியூட்’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ எனும் படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. ஆனால் சில காரணங்களால் அப்படம் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கத்தில் மீண்டும் அவரே நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் பெரம்பலூரில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் முன் பேசிய அவர், “கல்ச்சுரல்ஸ்னாலே எனக்கு என் காலேஜ் ஞாபகம் வந்துடும். அங்க ஏகப்பட்ட போட்டிகள் நடக்கும், ஆனா அதுல எதுலையுமே கலந்துக்காம வேடிக்கை மட்டும் பார்ப்பேன். அதுக்காக நாமெல்லாம் வருத்தப்படக்கூடாது. 

Advertisment

இங்க ஆடுனது 20 பேரு... ஆனா வேடிக்கை பாக்குறது நிறைய பேரு. அதனால நாம தான் அதிகம். கல்ச்சுரல்சே நமக்காக தான் நடக்குது. நம்ம பாக்குறதுக்காக தான் அவங்க ஆடுறாங்க. கொஞ்சம் யோசிச்சு பாருங்க, இங்க யாருமே இல்லனா நான் தனியாவா பேசிகிட்டு இருப்பேன். நீங்க இருக்கிறதுனால தான் நான் பேசுறேன். நீங்க இல்லனா எனக்கு வேல்யூ இல்ல. அதனால இந்த கல்ச்சுரல்ஸ்ல ரொம்ப முக்கியமான ஆட்கள் நீங்கதான். இருந்தாலும் என்னடா, நம்ம வேடிக்கை மட்டும்தான் பார்த்துக்கிட்டு இருக்கோம்னு நீங்க நினைச்சீங்கன்னா, லைஃப்ல ஒரு பாய்ண்ட் வரும். அப்போ இந்த உலகமே நம்மள வேடிக்கை பார்க்கும். அதனால அந்தப் பாய்ண்ட் வர வரைக்கும் கொஞ்சம் கூலா, ஜாலியா, என்ஜாய் பண்ணி மத்தவங்கள வேடிக்கை பாருங்க. வேடிக்கை பார்ப்பதற்காகத்தான் இந்த வாழ்க்கையே” என்றார்.

College students Pradeep Ranganathan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe