கோமாளி படத்தின் மூலம் தமிழ்த்திரைக்கு இளம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் மக்களிடையே பெரும் வரவேப்பைப் பெற்றத்தைத் தொடர்ந்து திரை ரசிகர்களிடையே இவர் பெரிய அளவில் கவனம் பெற்றார். இதற்கடுத்தாக அடுத்ததாக லவ் டுடே என்ற படத்தை இயக்கி, அதில் தானே முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இந்த படமும் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதனையடுத்து ட்ராகன், டியூட் போன்ற படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படங்களும் மாபெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தமிழ்திரையின் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார்.
இந்த நிலையில் இவர் தற்போது 'எல்.ஐ.கே.' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இவர் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிறது. இவ்வாறாக நடிப்பில் பரபரப்பாக இருந்து வருகிறார் பிரதீப். இந்த நிலையில், "நடிகர் அல்லது இயக்குனர் இதில் எது உங்களுக்கு பிடித்திருக்கிறது? என்று இவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த பிரதீப் " இப்போதைக்கு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். படத்தை இயக்குவதற்கான விருப்பம் உள்ளது. அதற்காக ஒரு கதை தயாராகவும் உள்ளது. கதையை பாதி அளவு எழுதி முடித்திருக்கிறேன், மீதமுள்ள கதையையும் எழுதி முடித்து விட்ட பிறகு தான் படம் இயக்குவதைப் பற்றி யோசிக்க முடியும். இப்போதைக்கு உறுதியாக எதையும் சொல்ல முடியாது. எல்லாவற்றையும் சூழ்நிலைகள் தான் தீர்மானிக்கும்" என்று கூறியுள்ளார். இதுவரை இவர் இயக்கியுள்ள படங்களும், இவர் நடித்துள்ள படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவரது நடிப்பில் அல்லது இயக்கத்தில் வெளிவரும் படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடையும் என ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us