கேஆர்ஜி கண்ணன் ரவியின் தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், பிரபல கூட்டணியான பிரபுதேவா - வடிவேலு - யுவன் சங்கர் ராஜா மூவரும் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துள்ள படம் ‘பேங் பேங்’. இப்படத்தின் டைட்டில் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அந்த டீஸரில் மனிதர்கள் ஜாம்பியாக மாறி ஓடுகிறார்கள். பிரபு தேவாவும், வடிவேலுவும் துப்பாக்கியுடன் வருகிறார்கள். வடிவேலு ஜாம்பி என்று கூறுகிறார். பிரபு வேலு, வடி தேவா என்று பெயர் மாற்றத்தோடு டீசர் அமைந்துள்ளது. இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் எழுதி இயக்குகிறார். இப்படம் ஒரு கலகலப்பான ஹாரர் ஜானரில் உருவாகிறது. நடிகர் பப்லு பிரித்திவிராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் படப்பிடிப்பு இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் ப்ரோமோ (mount bromo) என்ற இடத்தில் செயலில் இருக்கும் எரிமலை பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் நிலையில், பேங் பேங் டைட்டில் டீசர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
Follow Us