Advertisment

பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் ‘மூன்வாக்’ பட அப்டேட்

03 (3)

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸின் தயாரிப்பில் பிரபு தேவா நடிப்பில் உருவாகும் படம் ‘மூன்வாக்’. இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இருவரும் 29 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தில் பிரபுதேவாவுடன் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அஷோகன், சதிஷ், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொல்லு சபா சுவாமிநாதன், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், தீபா சங்கர் மற்றும் ராம்குமார் நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதி கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் இசை உரிமையை பிரபல நிறுவனமான ‘லஹரி மியூசிக்’ பெற்றுள்ளது.
இப்படத்தில் இருந்து முதல் பாடலாக ‘Storm – The Moonwalk’s Anthem’ என்ற பாடல் வரும் நவம்பர் 19, புதன்கிழமை அன்று, லஹரி மியூசிக் மற்றும் பிஹைண்ட்வுட்ஸ் டிவி யூடியூப் சேனல்களில் மட்டும் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. இதில் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்துள்ளனர். இப்பாடலை தமிழ் ராப் இசைகலைஞர் அறிவு பாடியுள்ளார்.

Advertisment
ar rahman Prabhu Deva
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe