Advertisment

2026 தேர்தல்; 10 நாட்களில் புது அறிவிப்புடன் வரும் பவர் ஸ்டார் சீனிவாசன்

11 (53)

சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றை திறந்து வைத்தார் பவர் ஸ்டார் சீனிவாசன். பின்பு செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது 2026 தேர்தலில் போட்டியிடுவீர்களா, அல்லது தனிக்கட்சி தொடங்குவீர்களா என்ற கேள்விக்கு, “இன்னும் 10 நாட்களில் சொல்கிறேன்” என்றார். 

Advertisment

பின்பு நடிகர்கள் கட்சி தொடங்குவது தொடரான கேள்விக்கு, “மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும். ஏற்கனவே அது நடந்து கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக அது வர வேண்டும் என்பது எனது விருப்பம். அதனால் கண்டிப்பாக அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான்” என்றார். 

Advertisment

பின்பு விஜய் கட்சிக்கு நடிகர் என்ற முறையில் ஆதரவு தெரிப்பீர்களா என்ற கேள்விக்கு, “நடிகர்கள் என்ற முறையில் கண்டிப்பாக அண்ணன் தம்பியாக இருப்போம். ஆனால் அரசியலில் நல்ல ஆட்சி தருவது திமுக தான்” என்றார். அடுத்து திமுக ஆட்சியில் போதைப்பொருள் அதிகமாக புழக்கத்தில் இருப்பதாக எழுப்பிய கேள்விக்கு, “அதெல்லாம் வதந்தி. எதாவது குறை சொல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள்” என்றார். 

தொழிலதிபராகவும் நடிகராகவும் வலம் வரும் பவர் ஸ்டார் சீனிவாசன், அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். 2019 மக்களவை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 

tvk vijay Power Star Srinivasan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe