பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்!

madanbob

Popular comedy actor Madan Bob passes away!

பிரபல குணச்சித்திர நடிகரும், காமெடி நடிகருமான மதன் பாப் (71) உடல்நலக்குறைவால் காலமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் 1953ஆம் ஆண்டு பிறந்த மதன் பாபின், இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி ஆகும். இசையமைப்பாளராக திரை வாழ்க்கையை தொடங்கிய மதன் பாப், தமிழில் 1984ஆம் ஆண்டு வெளிவந்த ‘நீங்கள் கேட்டவை’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.  அதன் பின்னர்  தேவர் மகன், பூவே உனக்காக, நீ வருவாய் என, பிரண்ட்ஸ், வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

தனது தனித்துவமான சிரிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும், அவரது உடல் மொழி ரசிகரிகளால் பெரிதும் பாராட்டப்பட்டது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான காமெடி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்துள்ளார். நகைச்சுவை நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட இவர் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த இவர், உடல்குறைவால் இன்று மாலை 5 மணியளவில் உயிரிழந்துள்ளார். இவரது உடல் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்து வருகின்றனர். 

passed away madhan bob
இதையும் படியுங்கள்
Subscribe