கோவை ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பிரசாந்த் ரங்கசாமி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘யெல்லோ’. இதில் பூர்ணிமா ரவி முதன்மை பாத்திரத்தில் நாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் பிரபு சாலமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நமீதா கிருஷ்ணமூர்த்தி, சாய் பிரசன்னா, டெல்லி கணேசன், வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ளது. இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. 

Advertisment

நிகழ்வில் பூர்ணிமா பேசுகையில், “இந்த விழா கனவாக இருந்தது. எங்கள் படத்தின் இசை விழா என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. ஒரு படத்தின் வெற்றியாக நினைப்பது அடுத்தடுத்த வாய்ப்புகள், எக்ஸ்பீரியன்ஸ், பணம். ஆனால்  இந்தப்படத்தில் எங்கள் எல்லோருக்கும் பல பாடங்கள் கிடைத்தது. நிறையக் கற்றுக்கொண்டோம். பலருக்குப் பெரிய படத்தில் வேலை பார்க்க ஆசை இருக்கும், நாங்கள் எங்களுக்கான வாய்ப்பை நாங்களே உருவாக்கி உழைத்துள்ளோம். 

Advertisment

இப்படத்தில் எல்லோருமே சின்ன ஸ்கிரீனுக்கு உழைத்து, இப்போது பெரிய திரைக்கு வந்துள்ளோம். எங்கள் டீமை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது. தயாரிப்பாளர் பிரசாந்த்திற்கு எங்கள் வளர்ச்சியில் நிறையப் பங்கு உள்ளது. படத்தைப் பார்த்து மீடியா நல்ல கருத்துக்களை எழுதுங்கள். படம் கண்டிப்பாகப் பிடிக்கும். இது கொரில்லா மேக்கிங், பல தடைகள் இருந்தாலும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளோம்” என்றார்.