Advertisment

அன்புள்ள காதலா? க்ரிஞ்ச் காதலா? - ‘பூக்கி’ விமர்சனம்

41

நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி முதல் முறையாக ஒரு படத்தை தயாரித்து வேறு ஒருவரை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த படத்தில் அவரது பங்களிப்பு என்ன? புதியதாக நாயகனாக அறிமுகமாகி இருக்கும் அஜய் தீசன் நடித்திருக்கும் இந்த பூக்கி திரைப்படம் இந்த கால இளைஞர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா, இல்லையா? 

Advertisment

நாயகன் அஜய் தீசனுக்கும் நாயகி தனுஷாவுக்கும் ஈகோ மோதல் காரணமாக தங்களது காதலை விட்டு பிரிகின்றனர். இருவரும் வெவ்வேறு பாதைகளில் சென்று நிம்மதியை தேட முயற்சிக்கின்றனர். அந்த சமயம் இருவருக்கும் வேறு வேறு நபர்களுடன் தொடர்பு ஏற்பட அதை காதலாக மாற்ற முயற்சி செய்கின்றனர். அதில் அவர்களுக்கு கிடைத்தது என்ன? இவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா? அல்லது அப்படியே பிரிந்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை. 

Advertisment

ஒரு சிம்பிளான கதையை வைத்துக்கொண்டு இந்த காதலர் தினத்தை முன்னிட்டு காதல் படமாக இப்படத்தை உருவாக்கி அதனுள் நகைச்சுவை விஷயங்களை உள்புகுத்தி அதனுடன் இந்த கால ட்ரெண்டுக்கு ஏற்ப இன்ஸ்டாகிராம் விஷயங்களை சேர்த்து அதன் மூலம் ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் கணேஷ் சந்திரா. நாம் ஏற்கனவே பார்த்து பழகிய காதல் கதையாகவே இது இருந்தாலும் காட்சிகளும் கதையமைப்பும், அதே போன்றுதான் இருக்கிறது. ஆனாலும் எந்த ஒரு இடத்திலும் பெரும்பாலும் தொய்வில்லாமல் வேகமாக நகர்வது படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்திருக்கிறது. இந்த கால ஜென்-சிகளுக்கு ஏற்றார் போல் திரைக்கதை அமைத்து அதற்கு ஏற்றார் போல் காட்சிகளும் அமைத்து பார்ப்பவர்களை ரசிக்க வைத்திருக்கின்றனர். குறிப்பாக இன்றைய இளைய தலைமுறை மனநிலையை கருத்தில் கொண்டு அதையே மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் அவர்களுக்கு ஏற்றார் போல் ரசிக்கும்படியான திரைப்படமாக அமைந்திருப்பது படத்தைக்கு பிளஸ்ஸாக அமைந்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. 

40

விஜய் ஆண்டனியின் மருமகனாக இருக்கும் அஜய் தீசன் ஏற்கனவே விஜய் ஆண்டனியின் மார்கன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இந்த படத்தில் அவரை நாயகனாக மாற்றி அழகு பார்த்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அந்த கதாபாத்திரத்திற்கு அவரும் நியாயம் செய்திருக்கிறார். இக்கால இளைஞர்களை அப்படியே கண்முன் நிறுத்தும் படியான கதாபாத்திரத்தில் அஜய் மிளிர்கிறார். நாயகி தனுஷா போட்டி போட்டுக் கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார். அவரும் இக்கால இளைஞர்களை அப்படியே பிரதிபலிக்கும் படியான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. முக்கிய பாத்திரத்தில் வரும் பாண்டியராஜன் லட்சுமி மஞ்சு சுனில் சியாரா உள்ளிட்ட பலர் அவரவர் வேலையை சிறப்பாக செய்து விட்டு சென்று இருக்கின்றனர். அதேபோல் படத்திற்கும் நல்ல பங்களிப்பு கொடுத்திருக்கின்றனர். 

இயக்குநர் கணேஷ் சந்திராவே இந்த படத்திற்கு ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். எந்தெந்த காட்சிகளுக்கு எப்படி நேர்த்தியான ஒளிப்பதிவு தேவையோ அதை சிறப்பான முறையில் கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இந்த கால ஜென்-சிகளுக்கு ஏற்றார் போல் பாடல்களை போட்டு கவர முயற்சி செய்திருக்கிறார். பின்னணி இசையை சிறப்பாக அமைத்திருக்கிறார். படத்துக்கும் அவரே எடிட்டிங் செய்திருப்பதால் படத்தை தன் எடிட்டிங் மூலம் தூக்கி நிறுத்தி இருக்கிறார். அதுதான் இந்த படத்தின் மிக சிறப்பான அம்சமாக பார்க்கப்படுகிறது. காட்சிகளையும் கதை அமைப்பையும் சிறப்பான முறையில் எடிட் செய்து எடிட்டர் விஜய் ஆண்டனி மிளிர்கிறார். 

40 (1)

இந்த கால இளைய தலைமுறையினரை மனதில் வைத்து உருவாக்கி இருக்கும் இந்த பூக்கி திரைப்படம் அவர்களுக்கு ஏற்றார் போல் கலகலப்பான அதேசமயம் காதலர் தினத்திற்கு ஏற்றார் போல் காதல் படமாக அமைந்து படத்தை கரை சேர்த்திருக்கிறது. காதலுக்குள் இருக்கும் பல்வேறு ரிலேஷன்ஷிப்களை தோலுரித்து காட்டி அதன்மூலம் பல விஷயங்களை வெளிக்கொண்டு வந்து அதன் மூலம் படத்தையும் ரசிக்க வைக்க முயற்சி செய்ததற்கு ஓரளவுக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

பூக்கி - க்ரிஞ்ச் காதல் இல்லை!

Movie review vijay antony
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe