மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படம்  " 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு ".  இந்தப் படத்தில் சபரி, ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.  கதாநாயகிகளாக ரச்சித்தா மகாலட்சுமி,  ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன்,  ஆகியோர் நடித்துள்ளனர். 

Advertisment

இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான  எம்.எஸ்.மூர்த்தி நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிரம்மாண்ட அரங்கில், படக்குழுவினருடன், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் ஆளுமைகள், திரை ஆளுமைகள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் “ஹஸ்கி ஹவுஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரும் வெளியிடப்பட்டது. 

Advertisment

இந்நிகழ்வில் இயக்குநர் பேரரசு பேசியதாவது, “ஒரே மேடையில் மூன்று விழா நடத்துவது இங்கு தான் பார்க்கிறேன். தயாரிப்பாளர் தாணுவையே மிஞ்சிவிட்டார் மூர்த்தி, வாழ்த்துகள். ஆர்.வி. உதயகுமார் இயக்குநர் சங்க தலைவரா? இல்லை ரச்சித்தா ரசிகர் மன்ற தலைவரா எனத் தெரியவில்லை. அந்தளவு தீவிர ரசிகராக இருக்கிறார். ரச்சித்தா எந்த கதாப்பாத்திரம் தந்தாலும் அப்படியே மாறிவிடுகிறார். அவருக்கு வாழ்த்துகள். பேய்ப்படம் என நினைத்தால் பாடல் எல்லாம் பக்திப்படம் போல உள்ளது. பிள்ளையார் பாடல், கருப்பண்ண சாமி பாடல், புத்தர் பாடல் எல்லாம் பயங்கர எனர்ஜியாக உள்ளது. அமைதிக்கான கடவுள் புத்தர், அவர் பற்றி தமிழ் சினிமாவில் வரவில்லை. இப்படத்தில் வந்துள்ளது மகிழ்ச்சி. மூர்த்தி அவர்களின் தன்னம்பிக்கைக்கும் உழைப்பிற்கும் இப்படம் பெரிய வெற்றி பெறட்டும்” என்றார்.