ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நடிப்பில் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியான படம் ‘ஓஜி’. இப்படத்தை சுஜீத் இயக்கியிருந்தார். டிவிவி எண்டர்டெயின்மெண்ட் பேனரில் தயாரிப்பாளர் தனய்யா தயாரித்திருந்தார். இப்படத்தில் இம்ரான் ஹாஷ்மி, பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரியா ரெட்டி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.154 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்போது வரை ரூ.200 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது. இப்படம் சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கியது. அதாவது அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்துடன் ஒப்பிடப்பட்டது. இரண்டு படங்களிலும் நாயகரக்ள் கேங்ஸ்டராக நடித்திருப்பதும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் ‘ஓஜி சம்பவம்’ என்ற பாடலும் இடம்பெற்றிருந்தது. ஆனால் இரண்டு படமும் வெவ்வேறு என்ற நோக்கில் இயக்குநர் சுஜீத் சர்ச்சைக்கு விளக்கமளித்திருந்தார்.
இந்த நிலையில் இப்படம் இன்னொரு சர்ச்சையிலும் சிக்கியுள்ளது. அதாவது படத்தின் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் படம் தயாரிப்பில் இருந்த போது கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலா வந்துள்ளது. இதற்கு தற்போது இயக்குநர் சுஜீத் விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிறைய விஷயங்கள் சொல்லப்படுகிறது, ஆனால் ஒரு படத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை கொண்டு செல்வதற்கு என்ன தேவை என்பதை மிகச் சிலரே புரிந்துகொள்கிறார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/22/17-2025-10-22-13-05-26.jpg)
ஓஜி படத்துக்காக எனது தயாரிப்பாளரும் படக்குழுவும் கொடுத்த நம்பிக்கை மற்றும் வலிமையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதுதான் இந்தப் படத்துக்கு இன்று பலத்தைக் கொடுத்திருக்கிறது. இது எளிதானது கிடையாது. ஆனால் ஒவ்வொரு முயற்சியும் அர்பணிப்பின் காரணமாகவே தொடங்கியது. அதன் செயல்முறையை மதிக்க வேண்டும். பவன் கல்யாண் மீதும் படத்தின் மீதும் ரசிகர்கள் காட்டும் அளவுக்கடந்த அன்பு அனைத்தையும் அர்த்தமுள்ளதாக்குகிறது.தனய்யாவின் தொடர்ச்சியான ஆதரவிற்கும் நம்பிக்கைக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.