சினிமாவில் நகைச்சுவை அல்லது துணை கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பின்னாளில், திறமை மற்றும் உழைப்பின் காரணமாக முன்னணி நடிகர்களாக மாறியுள்ளவர்கள் பலர், அதில் குறிப்பிடத்தக்கவர்கள் சூரி, யோகிபாபு போன்றோர்கள் ஆவர். அந்த வகையில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி முன்னணி நடிகராக மாறியவர் தான் சதிஷ். எதிர்நீச்சல் படத்தின் மூலம் புகழ் வெளிச்சம் பெற்ற சதிஷ், மான் கராத்தே, கத்தி, ஆம்பள , பைரவா, தங்க மகன், ரெமோ, வேலைக்காரன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் . சில படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது குரு சரவணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் சதிஷ். இதில் நடிகர் ஆதிசாய்குமார் மற்றும் நடிகை சரண்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். காமெடியை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தினை எஸ் ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது நாள் வரையில் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்த இந்த படத்திற்கு, தற்போது படத்தின் பெயரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. இந்த படத்திற்கு "பத்து நாள் ராஜா" எனப் பெயரிட்டுள்ளனர்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் சதிஷ். மேலும் படத்தின் பெயரைக் குறிப்பிட்டதோடு, இயக்குநர், நடிகர், நடிகை ஆகியோரையும் குறிப்பிட்டு ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
Follow Us