சன் நெக்ஸ்ட் ஓடிடி தளம் தங்களது தளத்தில் பிரீமியர் செய்யப்படும் அடுத்த படத்தை அறிவித்துள்ளது. டிசம்பர் 19 ஆம் தேதி நடிகை பார்வதி நாயர் நடிப்பில், திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘உன் பார்வையில்’ படம் சன் நெக்ஸ்டில் வெளியாகவுள்ளது. 

Advertisment

இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக பார்வதி நாயர் நடித்துள்ளார். கணவர் மற்றும் இரட்டை சகோதரியின் மர்மமான திடீர் மரணங்களைத் தொடர்ந்து, உண்மையை தேடும் அவரது பயணம், நிறைவேறியதா இல்லையா என்பதை நோக்கி இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் பார்வதி நாயரை தவிர்த்து மகேந்திரன், கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் நிழல்கல் ரவி ஆகியோர் நடித்துள்ளனர். 

Advertisment

இப்படம் குறித்து நடிகை பார்வதி கூறியதாவது, “பார்வையற்ற பெண்ணாக நடிப்பது சவாலானதும், அதே நேரத்தில் மிகவும் நெகிழ்ச்சியான அனுபவமாகவும் இருந்தது. இப்படத்தை நீங்கள் பார்த்து மகிழ்வதைக் காண, ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.