ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உஸ்தாத் பகத் சிங்’. ஹரிஷ் சங்கர் இயக்கியுள்ள் இப்படத்தில் பவன் கல்யாணோடு ஸ்ரீலீலா மற்றும் ராஷி கண்ணா நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 3ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் படத்தில் பார்த்திபனின் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இவர் வில்லனாக நடித்துள்ளார். இந்த போஸ்டர் குறித்து பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் அவரது ஸ்டைலில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “டைரக்டர் ஹரிஷ் சங்கர் சார், லெஃப்ட்ல இருக்கிறதுதான் ரைட்டான பார்த்திபன். அது ஏஐ இல்லை. அங்கிள் ஏஜ்-ல இருக்குற நடிகர்கள் கூட, ஆண்ட்டி ஏஜிங் பண்ணி வயசை குறைச்சிக்கிற இந்த கலிகாலத்தில… வளரும் (தெலுங்கில்) நடிகனான எனக்கு ஓவரா மேக்-அப்பி ஒரு வயசானவனா காட்ட நீங்க முயற்சி பண்றீங்களோன்னு நான் சந்தேகத்துக்கே இடமில்லாம சந்தேகப்பட்றேன்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/12/19-67-2026-02-12-12-03-23.jpg)
வில்லன் ஹீரோவோடதானே மோதுவான்? ஆனா நான் உங்களை பழி வாங்கப் போறேன். என் அடுத்தப் படத்தை முதல் நாள் முதல் காட்சியை பாருங்க புரியும். ஆனா ஒரு விஷயம், இன்னைக்கு தான் டப்பிங் பேசினேன். இப்போதைக்கு உங்களுக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கும் நன்றி, காரணத்தை மக்களே ரிலீஸ் வாங்க>>26-க்கும் 2026-க்கும் நடுவிலுள்ள 3-ல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/12/18-59-2026-02-12-12-10-10.jpg)