சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் 1960களில் ஒரு வரலாற்றுப் பின்னணியில் மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவருக்கு இப்படம் 100வது படமாகும். அதே போல் சிவகார்த்திகேயனுக்கு இது 25வது படம். இப்படம் வரும் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. 

Advertisment

இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் இந்தி மொழியை ஆட்சி மொழியாக சட்டம் ஏற்பட முயற்சிக்கும் போது அது தமிழ்நாட்டில் எந்த அளவு எதிர்ப்பை உருவாக்கியது என்பதை அடிப்படையில் அமைந்துள்ளது. சிவகார்த்திகேயனும் அதர்வாவும் சகோதரர்களாக வர சிவகார்த்திகேயன் இரயில் துறையில் வேலை செய்கிறார். ஆனால் அதர்வா கல்லூரியில் படித்துக்கொண்டு இந்தி திணிப்புக்கு எதிராக போராடுகிறார். இந்த எழுச்சி மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உருவாக்க அதனை தடுக்க நினைக்கிறார் ரவி மோகன். இந்த மோதலில் யார் ஜெயித்தார்கள் என்ற கேள்வியுடன் ட்ரெய்லர் முடிகிறது. இதனிடையே இந்தி கற்றுக்கொள்ள முற்படும் சிவகார்த்திகேயன் ஸ்ரீலீலாவிடம் பயிற்சி சேர்கிறார். இவர்களுக்குள் ஒரு காதல் ட்ராக்கும் இருக்கிறது. 

Advertisment

ட்ரெய்லரில் வரும் பல்வேறு வசனங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. “எட்டாங்க்ளாஸ் படிச்ச என்னை படிக்காத தற்குறியா ஆக்கிட்டாங்கப்பு” என பாட்டி சிவகார்த்திகேயனிடம் பேசும் வசனம், “உங்களுக்கு அரசாங்கத்தோட எதாவது பிரச்சனைன்னா டெல்லிக்கு போய் தெரிய படுத்துங்க” என போலீஸ்காரர் போராட்டம் நடத்தும் அதர்வாவிடம் கேட்க, “டெல்லி தான் இந்தியாவா” என ஆக்ரோஷமாக அதர்வா பதிலளிக்கும் வசனம், “காலி பயலுகத்தான் மக்களுடைய பார்வையில தலைவரா தெரியலாம்ல சார்” என ரவி மோகன் அரசு அதிகாரியிடம் பேசும் வசனம், “இத பண்ணவன் யாரா இருந்தாலும் அவன் என் தம்பி” என அண்ணா கதாபாத்திரத்தில் நடித்த சேத்தன் பேசும் வசனம், “நாங்க இந்தி திணிப்புக்கு தான் எதிரானவங்க, இந்திக்கோ இந்திக்காரங்களுக்கோ இல்ல” என சிவகார்த்திகேயன் ஒரு குடும்பத்திரிடம் பேசும் வசனம், “என் செந்தமிழை காக்க பெரும் சேனை ஒன்று உண்டு” என சிவகார்த்திகேயன் ரவி மோகனிடம் பேசும் வசனம் ஹைலைட்டாக இருக்கிறது. இந்த ட்ரெய்லர் தற்போது யூட்யூபில் 26 மில்லியன் பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடத்தில் உள்ளது.