சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘பராசக்தி’. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். இப்படத்தில் ரவி மோகன் நெகட்டிவ் ரோலில் நடித்து வர அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில் அவருக்கு 100வது படமாக இப்படம் அமைந்துள்ளது. இவரது இசையில் சமீபத்தில் வெளியான ‘அடி அலையே...’ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து யுவன் சங்கர் ராஜா குரலில் ஒரு பாடலை படக்குழுவினர் பதிவு செய்திருந்தனர். பின்பு படத்தின் போஸ்ட் புரஒடக்ஷன் பணிகளை படக்குழு தொடங்கியது. ஸ்ரீ லீலா முதலில் படத்தின் டப்பிங் பணியை தொடங்கினார், தொடர்ந்து அதர்வா டப்பிங் பணியை தொடங்கினார்.
இந்த நிலையில் செகண்ட் சிங்கிள் குறித்து சமீபத்தில் அப்டேட் வெளியிட்ட ஜிவி பிரகாஷ், இந்தப் பாடல் தனது கரியரில் சிறந்த பாடல்களில் ஒன்று எனக் கூறியிருந்தார். மேலும் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது செகண்ட் சிங்கிளுக்கான அப்டேட் வெளியாகியுள்ளது. பாடலின் புரோமோ நாளை(23.11.2025) மாலை 5.30 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிவகார்த்திகேயனும் ஸ்ரீ லீலாவும் இடம் பெற்றுள்ளனர். இப்பாடல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ஜிவி பிரகாஷ், “உங்கள் மனதை கொள்ளை கொள்ள வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். அதே போல் சுதா கொங்கரா, “சிறந்த பாடல் ஒன்று ஜிவி பிரகாஷிடம் இருந்து வருகிறது” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us