டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள படம் ‘பராசக்தி’. 1960களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவருக்கு இப்படம் 100வது படமாகும். இப்படம் வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ஆனால் 10ஆம் தேதியே முன்கூட்டியே வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது.
கடந்த 19ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இப்படத்தில் 60களின் காலகட்டத்தைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட கார்கள், ரயில், ரயில் நிலைய செட் மற்றும் அந்தக்கால அத்தியாவசிய பொருட்களை வைத்து, பராசக்தி பட உலகை செட் மூலம் உயிர்ப்பித்துள்ளனர் படக்குழுவினர். இந்த கண்காட்சி மூன்று நாள் திட்டமிடப்பட்டு தற்போது மக்களின் ஆதரவால் இன்னும் மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 25ஆம் தேதி வரை இக்காட்சி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் பட ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்த ஜனவரி 14-ஆம் தேதியிலிருந்து நான்கு நாட்கள் முன்னதாக ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது. இதனை புது ப்ரோமோ வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “படத்தின் திரையரங்கு வெற்றி வாய்ப்புகள் மீது மிகுந்த நம்பிக்கை தெரிவித்த, உலகெங்கிலும் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் விரிவான கலந்துரையாடல்கள் மற்றும் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜனவரி 9ஆம் தேதி விஜய்யின் கடைசி படமான ‘ஜன நாயகன்’ படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/22/14-36-2025-12-22-19-06-51.jpg)