சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘பராசக்தி’. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். இப்படத்தில் ரவி மோகன் நெகட்டிவ் ரோலில் நடித்து வர அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில் அவருக்கு 100வது படமாக இப்படம் அமைந்துள்ளது.
இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்த ஜனவரியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகத்தில் 1965ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகுவதாக ஒரு தகவல் இருக்கிறது. ஆனால் இப்படம் சகோதரர்கள் பற்றிய படம் என சுதா கொங்கரா ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி, சிதம்பரம் மற்றும் இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. கடந்த மாதம் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதையடுத்து படத்தின் முதல் பாடலின் புரொமோ அண்மையில் வெளியானது. ‘அடி அலையே...’ என்ற பாடல் ஷான் ரோல்டன் மற்றும் தீ குரலில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது முழுப் பாடல் லிரிக் வீடியோவுடன் வெளியாகியுள்ளது. இப்பாடல் சிவகார்த்திகேயனுக்கும் ஸ்ரீலீலாவுக்கும் இடையிலான காதலை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதற்கேற்றார் போல் ஸ்ரீலீலா, ‘சீட்டாட நீ போனா ராணியாத்தான் வருவேன் நான், கூட்டாளி ஆனாலும் கொல்லாமத்தான் விடுவேன் நான்’ போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஏகாதசி எழுதியுள்ளார். பாடலில் வரும் சில நடன அசைவுகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/06/10-10-2025-11-06-19-00-04.jpg)