96 படம் மூலம் பிரபலமான கௌரி ஜி கிஷன், தொடர்ந்து மாஸ்டர், கர்ணன் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்திலும் அடியே, உலகம்மை உள்ளிட்ட சில படங்களில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்போது விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் அவர் புதிதாக நடித்துள்ள படம் ‘அதர்ஸ்’. இப்படம் இன்று(07.11.2025) வெளியாகியுள்ளது. இப்படத்தின் சிறப்பு திரையிடல் நேற்று திரையிடப்பட்ட நிலையில் பின்பு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு யூடியூருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னதாக அந்த யூடியூபர், படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது கௌரி கிருஷ்னின் எடை குறித்து அநாகரிகமான முறையில் பட நாயகினிடம் கேள்வி கேட்டிருந்தார்.
இந்தக் கேள்வியால் பாதித்துள்ள கௌரி கிஷன் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் அந்த யூடியூபரை பார்த்து, “நீங்க அன்னைக்கு கேட்டது ரொம்ப அவமரியாதையான கேள்வி, அது ஜர்னலிசமே கிடையாது, ஏன் அப்படி கேள்வி கேட்டீங்க, என் எடைக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம், இதே ஒரு ஆம்பளைய பார்த்து இந்த கேள்விய கேப்பீங்களா, நீங்க கேட்டது உருவக்கேலி செய்யறது போல இருக்கு, நான் குண்டா இருக்கணுமா ஒல்லியா இருக்கணுமான்னு நான் தான் முடிவு பன்னனும்... என அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கினார். பதிலுக்கு அந்த நிருபரும் உங்ககிட்ட வேற என்ன கேட்க முடியும், குஷ்பு, சரிதா என அனைவரும் இந்த கேள்வியை எதிர்கொண்டவங்கதான் என வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் சுற்றி இருந்த பத்திரிக்கையாளர்களும் கௌரி கிஷனை கேள்வி கேட்க இதனால் அதிர்ச்சியடைந்த கௌரி கிஷன் இந்த இடத்துல நான் மட்டும் தான் பொண்ணு, என்ன சுத்தி இவ்வளவு ஆம்பளைங்க இருக்கீங்க, என்னைய டார்கெட் பண்ணி கேள்வி கேக்குற மாதிரி இருக்குன்னு தனது ஆதங்கத்தை தெரிவித்தார். இந்த நிலையில் அநாகரீகமாக கேள்வி கேட்ட அந்த யூடியூபரை கௌரி கிஷன் அதிரடியாக கேள்வி கேட்டது பலரது பாராட்டை பெற்றுள்ளது. கௌரி கிஷனுக்கு ஆதரவாக திரைப்படங்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இயக்குநர் பா ரஞ்சித், தனது எக்ஸ் பக்கத்தில், “அந்த நிருபரின் செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதை ஏற்றுக் கொள்ளவே முடியாதது மற்றும் வெட்கக்கேடானது. நடிகைகள் இன்னும் இந்த அநாகரீகமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பது தமிழ் சினிமா இன்னும் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவு என்பதை காட்டுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்
நடிகை குஷ்பூ, “பத்திரிக்கைத்துறை தனது தன்மையை இழந்து விட்டது. பத்திரிக்கையாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் பத்திரிக்கை துறையை சாக்கடைக்கு அழைத்து செல்கிறார்கள். ஒரு பெண்ணின் எடை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளவது அவர்களின் வேலை இல்லை. அதைப்பற்றி ஒரு ஹீரோவிடம் கேட்பது என்ன ஒரு அவமானமான செயல். அதற்கு தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று பதிலடி கொடுத்த கௌரி கிஷனுக்கு எனது பாராட்டுக்கள். மரியாதை ஒருபோதும் ஒருபக்கம் மட்டும் கிடைப்பதில்லை. நீங்கள் தன்னை மதிக்க வேண்டும் என எதிர்பார்த்தால் முதலில் மரியாதையை கொடுக்க தெரிந்து கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதே போன்று நடிகர் கவின் மற்றும் கௌரி கிஷனுடன் அதர்ஸ் படத்தில் நடித்த அஞ்சு குரியன் உள்ளிட்டோர் கௌரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/07/10-11-2025-11-07-15-52-30.jpg)