வ. கௌதமன் இயக்கி நாயகனாக நடித்திருந்த ‘படையாண்ட மாவீரா’ படம் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியானது. இப்படத்தில் சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, 'பாகுபலி' பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், 'ஆடுகளம்' நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், 'நிழல்கள்' ரவி , 'தலைவாசல்' விஜய், சாய் தீனா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள். 

Advertisment

மறைந்த பா.ம.க, காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், “அமேசான் பிரைமில் படையாண்ட மாவீரா. மண்ணையும் மானத்தையும் காத்து வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்பட்ம எடுக்கப்பட்டது. 

Advertisment

சாதி, மதம், மொழி, இனம், நாடு கடந்து தன் மண்ணையும் மக்களையும் நேசிக்கும் ஒவ்வொரு மனிதனையும் இப்படைப்பு மெய்சிலிப்போடு கொண்டாட வைக்கும் என  உறுதிபட சொல்லும் இயக்குநர் வ.கௌதமன் மேலும் இப்படைப்பினை குடும்பங்களோடு பார்ப்பதும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதும் மிக மிக முக்கியமானது என்கிறார்.