நான்காண்டுகளுக்கு ஒருமுறை என திட்டமிட்டு 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆசிய இளையோர் போட்டி, 2013ஆம் ஆண்டை தொடர்ந்து தற்போது மூன்றவாவது முறையாக இந்தாண்டு நடத்தப்படுகிறது. கடந்த 22ஆம் தேதி முதல் வரும் 31ஆம் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது. 

Advertisment

இந்த போட்டியில் கபடி விளையாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஆண்கள் மற்றும் பெண்களின் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இதில் மகளிர் அணியில் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இறுதி போட்டியில் ஈரானிய அணியை 75 - 21 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியதில் கார்த்திகாவிற்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதனால் தமிழக துணை முதல்வர் உ தயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சியினரும் கார்த்திகாவிற்கு பாராட்டு தெரிவிக்கிக்கின்றனர். 

Advertisment

அந்த வகையில் இயக்குநர் பா,ரஞ்சித், கார்த்திகாவிற்கு வாழ்த்து தெரிவித்ததோடு தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது, “கண்ணகி நகர் என்றாலே ஒருவித ஒவ்வாமையுடன் பார்க்கும் சிங்காரச் சென்னையில், இன்றைக்கு ‘கண்ணகி நகர்’ என்கிற பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இல்லை எனும் அளவிற்கு இந்த வெற்றி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தகுதிக்கும் திறமைக்கும் எந்த வரையறையோ படிநிலையோ இல்லை என்பதையும் கார்த்திகா மெய்ப்பித்துள்ளார்.

பொதுவாக, இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்குத் தமிழக அரசுப் பரிசுப் பொருட்களையும் அரசுப் பணியையும் வழங்கி கௌரவிப்படுத்திவருகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பஹ்ரைனில் வெற்றி பெற்ற இந்திய கபடி அணியில் இடம்பெற்ற ஹரியானவைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு தலா 3 கோடி ரூபாய் வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. முன்னதாக, சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த தமிழக அரசு, கபடி போட்டியில் இந்தியாவின் வெற்றிக்காக அயராது உழைத்த கண்ணகி நகர் கார்த்திகாவிற்கும் ஏனைய தமிழக வீராங்கனைகளுக்கும் அரசுப் பணியோடு கூடிய பரிசுத்தொகையை வழங்க முன்வர வேண்டும். 

Advertisment

மேலும், கண்ணகி நகரிலேயே அதிநவீன கட்டமைப்பு வசதி கொண்ட, சிறந்த கபடி மைதானத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கபடி வீரர், வீராங்கனைகளின் உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவையும், விளையாட்டு உபகரணங்களையும் வழங்க வேண்டும்” என தனது எக்ஸ் பக்கம் வாயிலாக  கேட்டுக் கொண்டுள்ளார்.