கலை, இலக்கியம் மற்றும் அரசியல் மேடைகளில் முற்போக்கு கருத்துக்களை அனல் தெறிக்கும் வரிகளோடு விதைத்தவர் தலித் சுப்பையா. இவர் கடந்த 2022ஆம் ஆண்டு தனது 69 வது வயதில் மறைந்தார். இவரது வாழ்க்கையை கொண்டு இசை வடிவிலான ஒரு ஆவணப்படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்திருந்தார். இவருடன் யாழி ஃபிலிம்ஸ் நிறுவனமும் தயாரித்திருந்தது. ‘தலித் சுப்பையா - வாய்ஸ் ஆப் தி ரிபெல்ஸ்’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட இப்படத்தை கிரிதரன் என்பவர் இயக்கியிருந்தார்.
இப்படம் கடந்த ஆகஸ்டில் நடந்து முடிந்த 17வது கேரளா சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்படம் விழாவில் விருது பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது ஆஸ்கர் ரேசில் இணைந்துள்ளது. இதனை இப்படத் தயாரிப்பாளர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது 2026 ஆம் நடக்கும் ஆஸ்கர் விழாவில் இப்படம் திரையிடப்படுவதாக தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/15/13-11-2025-11-15-18-05-52.jpg)