தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய், பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட இவரது படங்கள் பல கோடிகள் வசூலைப்  பெறுகிறது. இந்த நிலையில் அரசியலில் கால்பதித்துள்ள விஜய், இனி வரும் காலங்களில் திரையில்  நடிக்க மாட்டார் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்  அவர் நடித்து வரும் ஜனநாயகன்  படமே அவரின் கடைசித் திரைப்படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜனநாயகன் படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

Advertisment

ஜனநாயகன் படத்தின் "தளபதி கச்சேரி" என்ற பாடல் வெளியாகி அது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வரும் ஜனவரி மாதத்தில் பொங்கல் வெளியீடாக வரவுள்ள இப்படத்தின் மற்றொரு பாடலான " ஒரு பேரே வரலாறு... " என்ற மற்றொரு பாடலும் வெளியாகியுள்ளது. இப்பாடல் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே பத்து லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பாடலில் சில அரசியல் பேசும் வரிகளும் இருப்பது ரசிகர்களிடையே படத்தின் மீதான  ஆர்வத்தை அதிகரித்துள்ளது. விஜய் நடிப்பை விட்டுவிட்டு அரசியலில் பிரவேசிப்பதாலும், இது அவரது கடைசி படம் என்பதோடு மட்டுமல்லாமல் அப்படம்  அரசியல் சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்று கூறப்படுவதாலும், இப்படம் ரசிகர்களையும் தாண்டி பொது மக்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகும் இப்படம்,   எந்த மாதிரியான கதைக்களத்தைக்  கொண்டது, என்ன மாதிரியான கருத்தை முன்வைக்கப்போகிறது என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படமும் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெற்று பெருமளவில் வெற்றி பெரும் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.