வெள்ளித்திரை மற்றும் தொலைக்காட்சியில் சிறந்த படைப்புகளுக்கு கொடுக்கப்படும் புகழ் பெற்ற விருது கோல்டன் குளோப் விருது. அந்த வகையில் இந்தாண்டுக்கான 83வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடந்த இந்த விழாவில் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் செட்டிலாகியிருக்கும் பிரியங்கா சோப்ராவும் கலந்து கொண்டு விருது வழங்கினார். அவர் தொலைக்காட்சி டிராமாவுக்கான சிறந்த நடிகர் விருதை அறிவித்து வழங்கினார். 

Advertisment

இந்த விழாவில் திரைப்படம் பொறுத்தவரை பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்கிய ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ படம் அதிகபட்சமாக 4 விருதுகளை வென்றுள்ளது. இப்படம் மொத்தம் 9 பிரிவுகளில் நாமினேஷ் செய்யப்பட்டது, ஆனால் சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த துணை நடிகை ஆகிய நான்கு பிரிவுகளில் வென்றது. 

Advertisment

அதே போல் தொலைக்காட்சி தொடர் பொறுத்தவரை ‘அடலசன்ஸ்’ தொடர், 4 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை மற்றும் சிறந்த லிமிடெட் சீரிஸ் உள்ளிட்ட பிரிவுகளில் வென்றுள்ளது.