பொதுவாக தமிழ் சினிமாவில் பெண்களின் உளவியல் ரீதியான படங்கள் குறைவாகத்தான் வெளியாகிறது. அதிலும் பல படங்கள் தோல்வியை தழுவும் பட்சத்தில் சில படங்கள் மட்டுமே வெற்றி பெறுகிறது. தற்பொழுது நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த மாதிரியான கதைக்களத்தை வைத்து உருவாகி இருக்கும் இந்த ‘ஓ பட்டர்ஃபிளை’ திரைப்படம் பார்ப்பவர்களை எந்த அளவு கவர்ந்திருக்கிறது? 

Advertisment

நாயகி நிவேதா சதீஷும் சிபி சந்திரனும் ஒருவருக்கொருவர் காதலிக்கின்றனர்.  இவர்களின் காதல் ஒரு கட்டத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் முன்பாகவே சிபி சந்திரனின் நண்பரான அட்டுலை நிவேதா சதீஷ் திருமணம் செய்து விடுகிறார். இருவரும் கொடைக்கானல் டூர் செல்கின்றனர். இதற்கிடையே நிவேதா சதீஷ் தன்னுடைய முன்னாள் காதலை எப்படியாவது தன் கணவனிடம் கூறிவிட வேண்டும் என பல்வேறு முயற்சிகளில் செய்கிறார். ஆனால் அவரால் கூற முடியவில்லை. தன் கணவர் மிகவும் உணர்ச்சி வசமிக்க மனிதராக இருப்பதால் நிவேதா சதீஷ் தயங்குகிறார். அந்த சமயம் கொடைக்கானலில் இவர்கள் இருக்கும் நேரத்தில் சிவி சந்திரனும் அங்கு வர மூவரும் ஒரே வீட்டினில் தங்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் மிகவும் உளவியல் ரீதியாக மனப்போராட்டத்தில் தள்ளப்படுகிறார் நிவேதா சதீஷ். இதைத் தொடர்ந்து நிவேதா சதீஷ் சிபி சந்திரன் காதல் விவகாரம் கணவன் அட்டுலுக்கு தெரிய வருகிறதா, இல்லையா? இதனால் ஏற்படும் அதிர்ச்சி மிக்க சம்பவம் என்ன? என்பதே இப்படத்தின் மீதி கதை. 

Advertisment

373

பெண்களுக்கு ஏற்படும் மன ரீதியான போராட்டத்தை மற்றும் உளவியல் ரீதியான விஷயங்களை எப்படி கையாள்வது போன்ற அம்சங்கள் நிறைந்த ஒரு திரில்லர் படமாக இந்த படத்தை கொடுத்து அதை ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் விஜய் ரங்கநாதன். ஒரு சிறிய கதையை வைத்துக்கொண்டு அதை கவித்துவமான முறையில் ஆழமான காட்சி அமைப்புகள் மூலம் நீண்ட படமாக இழுத்து இருப்பது பல இடங்களில் நம்மை நெருட செய்தாலும் சில இடங்களில் மட்டும் ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. அதே போல் பல இடங்களில் அழுத்தங்களும் குறைவாக அப்படியே மேம்போக்காக படம் கடந்து செல்வதும் சற்றே மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. திரைக்கதையில் இன்னும் கூட சுவாரசியம் தேவைப்படுகிறது அதையும் சிறப்பான முறையில் கொடுத்திருக்கும் பட்சத்தில் இந்த படம் பெண்களுக்கான உளவியல் ரீதியான ஒரு சிறப்பான படமாக அமைந்திருக்கும். சிறிய கதையாக இல்லாமல் கதைகளுக்குள் பல்வேறு எலிமென்ட்ஸ்களை வைத்து கூடுதல் அம்சங்களுடன் கூடிய நேர்த்தியான திரைக்கதை அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். 

நாயகி நிவேதா சதீஷ் மனப்போராட்டத்தை வெளிப்படுத்துவதில் சிறந்த நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். கணவரிடம் தன் மனக்குமுறல்களை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவர் செய்யும் நடிப்பு சிறப்பானதாக அமைந்திருக்கிறது. காதலனாக வரும் சிபி சந்திரன் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த கால இளைஞர்களை அப்படியே பிரதிபலிக்கும்படியான கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். கணவராக வரும் அட்டுல் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து உணர்ச்சி மிக்க இளைஞராக நிறைவான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு சென்று இருக்கிறார். மற்றபடி முக்கிய கதாபாத்திரங்களில் வரும் நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி, கீதா கைலாசம் உட்பட பலர் அவரவர் வேலையை நிறைவாக செய்துவிட்டு சென்றிருக்கின்றனர். அதேபோல் படத்தில் இவர்களுக்கு அதிக வேலையும் இல்லை. 

Advertisment

372

வேதாராமன் சங்கர் ஒளிப்பதிவில் மலை மற்றும் அதை சார்ந்த இடங்கள் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட்டு அந்த இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. வைசாக் சோம்நாத் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. 

கட்டிய கணவனிடம் தன் பழைய காதலை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் பெண்கள் சந்திக்கும் உளவியல் ரீதியான மனப்போராட்டங்களை சிறப்பான முறையில் காட்சிப்படுத்தி அதை ஆழமான அழுத்தமான முறையில் காண்பித்து ரசிக்க வைக்க முயற்சி செய்த இயக்குநர் திரைக்கதையில் இன்னும் கூட சுவாரசியத்தை சேர்த்து கூட்டி காண்பித்து இருந்தால் இந்த படம் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும்.

‘ஓ பட்டர்ஃபிளை’ - கொஞ்சம் கலர்ஃபுல்!