விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. பொதுவாக சமீப காலங்களில் விஜய்யின் ஒவ்வொரு படத்திற்கும் எதாவது ஒரு வகையில் பிரச்சனை உருவாகி வருகிறது. இதனால் கடைசி நிமிடம் வரை படக்குழுவிற்கு நெருக்கடி ஏற்பட்டு பட வெளியீட்டை சுமூகமாக வெளியிடும் சூழல் அமையவில்லை. ஆனால் இப்படி வரும் தடைகளை கடைசி நேரத்தில் எப்படியாவது படக்குழு சமாளித்து அறிவித்த தேதியில் வெளியிட்டு வருகிறது. ஆனால் அதே போல் ஜன நாயகன் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

Advertisment

பட ரிலீஸுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் தற்போது வரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை நேற்று மற்றும் இன்று நடந்துள்ளது. தணிக்கை வாரியமும் படக்குழு தரப்பும் தங்களது வாதங்களை முன்வைத்துள்ளனர். நீதிபதியும் தணிக்கை வாரியத்துக்கு சராமரி கேள்வி எழுப்பினார். இவ்வழக்கின் தீர்ப்பு பட வெளியீட்டு தேதியான ஜன.9ஆம் தேதி காலை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது.

Advertisment

இந்நிலையில் ஜனநாயகன் படம் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக  தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “இந்த தகவலை (update) எங்கள் மதிப்புமிக்க பங்குதாரர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். ஜனவரி 9ஆம் தேதி ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜன நாயகனின் வெளியீடு, நமது கட்டுப்பாட்டை மீறிய தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

jana-nayagan-refund

இந்தப் படத்தைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்ச்சிகளை நாங்கள் ஆழமாகப் புரிந்துகொள்கிறோம். மேலும் இந்த முடிவு எங்களில் எவருக்கும் எளிதான ஒன்றல்ல. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதுவரை, உங்கள் பொறுமையையும், தொடர்ந்து அன்பையும் அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் அசைக்க முடியாத ஆதரவு எங்களின் மிகப்பெரிய பலம் இது முழு ஜன நாயகன் குழுவிற்கும் எல்லாவற்றையும் குறிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment