ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கமல் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சுந்தர் சி இயக்குநராக கமிட்டானார். ஆனால் ரஜினிக்கு கதை பிடிக்காத காரணத்தினால் அவர் வெளியேறிவிட்டார். அவருக்கு பதில் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு கமலுடன் இணைந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் ஜெயிலர் 2 படம் தொடர்பாக ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வர அனிருத் இசையில் சென்னை, கேரளா, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் சிவராஜ்குமார், சுராஜ் வெஞ்சரமூடு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய் சேதுபதியும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் படத்தில் ஒரு குத்துப் பாடல் இருப்பதாகவும் அப்பாடலுக்கு பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி நடித்துள்ளதாகவும் லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னையில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் பாகத்தில் இதேபோன்று ‘காவாலா’ எனும் குத்து பாடலுக்கு தமன்னா நடனமாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us