அகில் சத்யன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள படம், சர்வம் மாயா. இப்படத்தில் அஜு வர்கீஸ் மற்றும் மூத்த நடிகர் ஜனார்த்தனன் ஆகியோர் நடித்துள்ளனர். ஃபயர்ஃப்ளை ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.   

Advertisment

இப்படம் 2025 டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இது தொடர்பாக ஒரு போஸ்டரும் வெளியாகியுள்ளது. அதை பார்க்கையில் குடும்ப நகைச்சுவை திரைப்படமாக இப்படம் இருக்கும் என்பதை உணர்த்துகிறது. போஸ்டரில் நிவின் பாலி, அஜு வர்கீஸ் மற்றும் மூத்த நடிகர் ஜனார்த்தனன் இடம் பெற்றுள்ளனர். மூவரின் சுவாரஸ்யமான முகபாவனைகள், அனைத்து தரப்பினரையும் கவரும் நகைச்சுவை கலாட்டாவாக இப்படம் இருக்குமென்பதை உறுதி செய்கிறது. 

Advertisment