நாடு முழுவதும் பூதாரகரமாகியுள்ள தெரு நாய்கள் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உத்தரவில், தெரு நாய்களை பிடித்து உரிய தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்த பிறகு அந்த நாய்கள் எங்கு பிடிக்கப்படுகிறதோ அந்த பகுதியிலேயே விட்டுவிட வேண்டும் என்று கூறியிருந்தது. மேலும், ரேபிஸ் நோய் பரப்பக்கூடியதாக கருதப்படும் நாய்களை பாதுகாப்பான காப்பகங்களில் உரிய முறையில் அடைத்து வைக்க வேண்டும் எனவும் கூறியிருந்தது.
இந்த தீர்ப்பிற்கு நாய் பிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போராட்டமும் நடத்தினர். அந்த வகையில் தெரு​நாய்​களை பாது​காக்​கக்கோரி சென்னை எழும்​பூர் லேங்ஸ் கார்​டன் சாலை​யில் ஒரு விலங்கு நல அமைப்பு சார்பில், அமை​திப் பேரணி நடை​பெற்​றது. இதில் நடிகை நிவேதா பெத்​து​ராஜும் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “இந்தியாவில் மொத்தம் நாலரை லட்சம் நாய்கள் இருக்கின்றன. அதற்கு காப்பகங்கள் அமைக்க குறைந்தது 2500 இடங்கள் தேவைப்படும். அதில் வேலை செய்ய, பராமரிக்க ஆட்கள் வேண்டும். இப்படி நிறைய வேலைகள் இருக்கிறது. அதனால் தடுப்பூசி போடுவதில் நிதி ஒதுக்கலாம். அந்த பொறுப்பை இது போன்ற என்ஜிஓ-க்களிடம் கொடுக்கலாம். மக்களையும், நாய்களையும் பாதுகாக்கவும் தானே அரசாங்கத்தை வாக்களித்து தேர்வு செய்கிறோம்.
இப்போது யாருக்குமே கருணை உள்ளம் இருப்பதில்லை. நான் ரோட்டில் போகிற போது சின்ன பசங்களே நாய்களை அடிக்கிறாங்க. இப்படி இருந்தால் மிருகங்கள் மீது எப்படி கருணை உண்டாகும். இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்றால், நாய்களைப் பிடித்து தடுப்பூசி போட்டு மீண்டும் அதை அதே இடத்தில் விடுவது தான். அதற்கு பதிலாக காப்பகம் அமைத்தால் நாய்கள் ஒன்றுக்கொன்று கடித்து அடித்துக் கொள்ளும். அது நல்லதுக்கு இல்லை. மனிதர்கள் மட்டும் இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்றால் அதற்கு வழியே இல்லை. அதனால் மற்ற உயிரினங்கள் மீதும் கருணையோடு இருக்க வேண்டும்” என்றார்.
Follow Us