தெலுங்கு மற்றும் தமிழில் கவனம் செலுத்தி வந்த நிதி அகர்வால், கடந்த சில ஆண்டுகளாக லைம் லைட்டில் இல்லாமல் இருந்தார். 2022க்கு பிறகு அவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகாத நிலையில் கடந்த ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘ஹரி ஹர வீரமல்லு’ படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார். தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான ‘தி ராஜா சாப்’ படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பவண் கல்யாண் குறித்து பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது, “பவன் கல்யான் ஒழுக்கமான மனிதர். அவரது நோக்கம், தெளிவு மற்றும் மக்களுடனான தொடர்பு... அவர் ஒரு நாள் இந்தியாவின் பிரதமரானால் கூட எனக்கு ஆச்சரியமில்லை. சினிமாவில் இருந்து அரசியலுக்கு அவர் மாறியது ஒரு திட்டமிடப்பட்ட அல்லது திடீர் மாற்றமாகத் தெரியவில்லை. அது அவரது நீண்டகால பொது வாழ்க்கையின் ஒரு நீட்சியாகவே இருந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/22/17-38-2026-01-22-15-08-27.jpg)
1990-களில் தொடங்கிய அவரது சினிமா வாழ்க்கை, மக்களுடன் கலக்க உதவியது. இந்த குணம் அவரது அரசியல் பயணத்தை வலுப்படுத்தியுள்ளது” என்றார். இவரது கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து ஒரு சிலர் ஆதரவாகவும் ஒரு சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பவன் கல்யாண் தற்போது ஆந்திரவின் துணை முதல்வராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us