தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினியும் கமலும் ஆரம்பக்காலத்தில் ஒரே படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், பதினாறு வயதினிலே மற்றும் நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களும் இந்த லிஸ்டில் அடங்கும்.
இதையடுத்து இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து இருவரும் நடிக்க திட்டமிட்டனர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும் கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இது அடுத்தக் கட்டத்திற்கு நகரவில்லை.
இதையடுத்து படத்தின் இயக்குநர் தேடுதல் வேட்டை நடந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் அது இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் நெல்சன் இப்படத்தை இயக்குவதாகவும் படத்தின் ப்ரோமோ ஷூட்டிங் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் நெல்சன் மற்றும் அனிருத்தும் கலந்து கொள்வதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நெல்சன் தற்போது ரஜினியை வைத்து ஜெயிலர் 2 படத்தை இயக்கி வருகிறார். இதற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். இதையடுத்து மீண்டும் ரஜினி படத்தில் பணியாற்ற இருவரும் கைகோர்த்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக கமலும் இப்படத்தில் இருப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us