கவின் - ஆண்ட்ரியா நடிப்பில் அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் ஆண்ட்ரியா மற்றும் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகிவுள்ள படம் ‘மாஸ்க்’. இப்படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் மென்டராக பணியாற்றியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இப்படம் வரும் 21 ஆம் தேதி வெளியாகியுள்ளது. 

Advertisment

இந்த நிலையில் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் விஜய் சேதுபதி, நெல்சன் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர். நிகழ்வில் நெல்சன் பேசுகையில், “படத்துடைய கதை ரொம்ப குதர்க்கமா இருக்கு. கதைக்கும் வெற்றி சாருக்கும் என்ன சம்பந்தமுன்னு தெரில. இந்த மாதிரிலாம் விபரீதமா யார் யோசிக்கிறான்னு கேட்டா, விகர்ணன்னு ஒரு டைரக்டர். அவர பார்த்தே ஆகணும்னு ஆசைப்பட்டேன்

Advertisment

ஒரு நாள் வெற்றி சார் ஆபீஸ்ல விகர்ணனை பார்த்தேன். பார்த்தவுடனே தெரிஞ்சுது எல்லா க்ரைமுக்கும் இந்த மூஞ்சி செட் ஆகுதேன்னு. நீங்க எழுதுன இந்தக் கதையை படமா எடுக்கிறது கஷ்டம்னு சொன்னேன், அதுக்கு சில மாற்றங்களை செஞ்சு எடுக்கலாம்னு சொன்னாரு. இந்த மாதிரி அவர் யோசிச்சதே பெரிய விஷயம். ஆனா அதை விட பெரிய விஷயம், இந்தக் கதையை இவ்வளவு பெரிய டைரக்டர்கிட்ட சொல்லி ஏமாத்துனது.

இந்த படத்தை பத்தி நானும் கவினும் அப்பப்போ பேசுவோம். கதை ரொம்ப புதுசு, இந்த மாதிரி சீன்லாம் நமக்கு ஏன் தோனலைன்னு தோணுச்சு. அதே சமயம் அப்படி தோனாம இருக்குறதும் நல்லதுன்னும் தோனுச்சு. ஆனா அதை சரியா எடுத்து இருக்கான். முதல்முறையா வெற்றி சார் ஒரு என்டர்டைன்மெண்ட் சோன்ல படம் பண்ணி இருக்காரு. கண்டிப்பா சோசியல் பார்வை இருக்கும். ஆனா என்டர்டெயின்மென்ட் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.

Advertisment

படத்துல கவினுடைய கேரக்டர் கேட்டப்போ, கவின பிடிக்காத ஒருத்தர் படம் பண்ணா எப்படி இருக்கும், அந்த மாதிரி தான் இருந்துச்சு. ஆனா அதை வெற்றி சார் சரி பண்ணிருக்கார். கவின் நடிச்ச படங்கள்லயே இந்த படம் தான் டெக்னிக்கலா ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு. கவின் தைரியமா எல்லா எக்ஸ்பிரிமெண்ட் படங்களையும் பண்ணுவான். அதுல நிறைய அடியும் வாங்கி இருக்கான். ஆனா அந்த படங்களெல்லாம் காலத்துக்கும் நிக்கும். ஒவ்வொரு படத்துக்கும் அவனுடைய நடிப்பு டெவலப் ஆகிட்டே இருக்கு” எனப் பேசினார்.