தென்னிந்தியத் திரைத்துறையில் டாப் நடிகையாக இருந்து வருகிறார் நயன்தாரா. முதலில் மலையாளத்தில் நடித்து வந்த இவர், தமிழில் சரத்குமார் நடித்த ஐயா படம் மூலம் அறிமுகமாகி ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். பின்பு லீட் ரோலிலும் நடித்து தனக்கென தனி இடம் பிடித்தார். பின்பு 2022ஆம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தற்போது மூக்குத்தி அம்மன் 2, ராக்காயி, மன்னாங்கட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதே போல் மலையாளத்தில் பேட்ரியாட், டியர் ஸ்டூடன்ட்ஸ் தெலுங்கில் ‘மன சங்கர வர பிரசாத் கரு’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

Advertisment

இப்படங்களை தொடர்ந்து தமிழில் கவினுடம் ‘ஹாய்’ என்ற தலைப்பில் ஒரு படம் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நயன்தாரா, நடிக்க வந்து 22 ஆண்டுகள் ஆகியுள்ளதாக உருக்கமாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள அவர், “22 வருடங்கள் கேமரா முன் முதன்முதலில் நான் நின்ற போது, திரைப்படங்கள்தான் என் வாழ்க்கையின் காதலாக மாறும் என்று தெரியாமல் போனது. 

Advertisment

ஒவ்வொரு ஷாட்டும், ஒவ்வொரு பிரேமும், ஒவ்வொரு மௌனமும் ... என்னை வடிவமைத்தது. என்னை குணப்படுத்தியது, என்னை நானாக மாற்றியது. அதற்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.