Advertisment

நவ்யா நாயரிடம் அத்துமீற முயன்ற நபர்

473

தமிழில் 'அழகிய தீயே', 'மாயக்கண்ணாடி', 'பாசக்கிளிகள்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நவ்யா நாயர். மலையாள நடிகையான இவர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் மல்லிகைப்பூ எடுத்து சென்றதற்காக ரூ.1.14 லட்சம் அபராதம் செலுத்தும் நிலமைக்கு சென்றார். இது பரவலாக பேசப்பட்டது. 

Advertisment

இந்த நிலையில் அவர் புதிதாக நடித்துள்ள படம் ‘பாதிராத்திரி’. மலையாளப் படமான இதில் இவருடன் சௌபின் ஷாஹிர், அகஸ்டின், சன்னி வெயின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரதீனா இயக்கியுள்ள இப்படத்தை பென்சி புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கிறது. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையொட்டி கேரளா கோழிக்கோட்டில் உள்ள ஒரு மாலில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. 

Advertisment

விழாவில் கலந்து கொண்ட நவ்யா நாயர், விழா முடிந்து அங்கிருந்து வெளியேறுகையில் பாதுகாவலர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் நவ்யா நாயரை தகாத முறையில் தொட முயன்றார். அவர் லேசாக தொட்டவுடன் அதிர்ச்சியில் திரும்பி பார்த்த நவ்யா நாயர் சற்று அசௌகரியமாக உணர்ந்தார். மேலும் அந்த நபரை கோபமாக பார்த்தார். பின்பு உடனே நவ்யா நாயருக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக அவர் பின்னாடி வந்த கொண்டிருந்த சௌபின் ஷாஹிர் அந்த நபரின் கையை தடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.   

Kerala Actress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe