பெண் கல்வியை மையமாக வைத்து பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற தவறியது இல்லை. தற்போது அந்த வரிசையில் இணைய நறுவி திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அது போதிய வரவேற்பை பெற்றதா, இல்லையா?
ஒரு மலை கிராமத்தில் இருக்கும் அடர்ந்த காட்டுப்பகுதியில் செல்லும் ஆண்கள் மர்மமான முறையில் இறந்து கிடக்கின்றனர். இதனால ஏன் இந்த காட்டுப்பகுதியில் ஆண்கள் நுழைய மறுக்கின்றனர். இந்த நிலையில் அந்த காட்டை ஆராய்ச்சி செய்வதற்காக நாயகி வின்சு சாம், பப்பு, பாடினி குமார், பிரவீனா, ஜீவா ரவி ஆகியோர் காட்டுக்குள் செல்கின்றனர். சென்ற இடத்தில் மர்மமான முறையில் பல்வேறு அமானுஷ்யங்கள் இவர்களை சுற்றி நடக்கிறது. இதனால் மிகவும் பதட்டத்துக்குள்ளாகும் இவர்கள் அதை எப்படி சமாளித்தார்கள்? இதற்கிடையே காணாமல் போன இவர்களது நண்பர் ஹரிஷ் அலக் என்னவானார்? அந்த காட்டில் இருக்கும் மர்மம் என்ன? என்பதே இந்த நறுவி படத்தின் மீதி கதை.
கதையில் அமானுஷ்யத்தை மையமாக வைத்துக்கொண்டு அதன் மூலம் ஒரு திரில்லர் பாணியில் சமூகத்துக்கு அவசியமான ஒரு மெசேஜை வைத்துக்கொண்டு விறுவிறுப்பான படமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் முபாரக். சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லாமல் கதையை வேறு வேறு பாதையில் பயணிக்க செய்து அதனுடைய அமானுஷ்ய விஷயங்களை உட்பகுத்தி அதன் மூலம் ஹாரர் ரசிகர்களை ரசிக்க வைக்கும் படியான ஒரு படத்தை கொடுத்து மற்றவர்களுக்கு ஒரு திரில்லர் படம் பார்த்த உணர்வை கொடுத்திருக்கிறார். இரண்டும் வெவ்வேறு ஜானர்கள் என்பதால் எந்த ஜானர் மக்கள் பின் தொடர வேண்டும் என்ற குழப்பம் படம் பார்க்கும் பொழுது நிலவுகிறது. இருந்தும் சமூகத்துக்கு ஒரு அவசியமான பெண் கல்வியை மையமாக வைத்து உருவாக்கி இருக்கும் இந்த திரைப்படம் வித்தியாசமாகவும் அதே சமயம் ஓரளவு விறுவிறுப்பாகவும் இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மற்றபடி திரைக்கதையில் இன்னமும் தெளிவும் சுவாரசியமும் கூட்டி இருக்கலாம்.
நாயகனாக வரும் ஹரிஷ் அலக் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். குழந்தைகளுடன் இவர் நடித்திருக்கும் நடிப்பு நன்றாக கெமிஸ்ட்ரியுடன் ஒன்றி இருக்கிறது. இவரது காதலிகளாக வரும் வின்சு சாம் மற்றும் பிரவீனா ஆகியோர் அவரவர் வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர். இரண்டு பேருக்குமே ஒவ்வொரு பாடல்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது அதில் எந்த அளவு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவு காட்டி ரசிக்க வைத்திருக்கின்றனர். மற்றபடி படத்தில் தனக்கு கொடுத்த வேலையை தனக்கு என்ன வருமோ அதன்படி செய்து இருக்கின்றனர். நடிகர் பப்பு மற்றும் பாடினி குமார் வரும் காட்சிகள் கலகலப்பாக இருக்கின்றன. படத்தை வேகமாக நகர செய்வதற்கு இவர்களது கதாபாத்திரம் உதவி இருக்கிறது. மற்றபடி உடனடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர். இவர்களது பங்களிப்பு பணத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
ஆனந்த் ராஜேந்திரன் ஒளிப்பதிவில் காடு மற்றும் அதை சுற்றுவட்டார பகுதிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அஸ்வத் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை ஓகே.
பெண்களுக்கு கிடைக்கும் கல்வி என்பது அவர்களை மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை எந்த அளவு உயர்த்தும் என்பதையும் அதேசமயம் அவர்களுக்குள் இருக்கும் பரந்து விரிந்த கனவுகள் எந்த அளவு அவர்களுக்கு ஒரு ஏக்கமாக இருக்கிறது என்பதை ஹாரர் திரில்லர் பாணியில் ஒரு படமாக கொடுத்து அதை ஓரளவு ரசிக்க வைக்கும் படமாகவும் கொடுத்து இருக்கிறார் புதுமுக இயக்குனர் முபாரக். சொல்ல வந்த விஷயத்தை இன்னமும் கூட தெளிவாக கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். திரைக்கதையில் இன்னமும் சுவாரசியமும் தெளிவும் தேவைப்படுகிறது.
நறுவி - அறியாதவள்!